11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்த தமிழக அரசு
சென்னை: தமிழகத்தில் 11 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் ரீட்டா ஹரிஷ் தாக்கூர், சர்க்கரை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். சர்க்கரை கழகத்தின் மேலாண்மை இயக்குனராகவும் அவர் செயல்படுவார்.
நில நிர்வாக இணை கமிஷனர் ஜெ.விஜயராணி, வேளாண்மை கூடுதல் இயக்குனராக மாற்றப்பட்டார்.தர்மபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் கே.கற்பகம், நில நிர்வாக இணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சுற்றுலா, கலாசாரம் மற்றும் அறநிலையத்துறை கூடுதல் செயலாளர் பிங்கி ஜோவெல், ஊரக மேம்பாடு மற்றும் ஊராட்சித்துறை கூடுதல் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். வணிக வரிகள், அதிக வரி செலுத்துவோர் பிரிவு கூடுதல் கமிஷனர் எம்.பாலாஜி, பொதுப்பணித்துறை கூடுதல் செயலாளராக (டெல்டா மாவட்ட பாசனம்) நியமிக்கப்பட்டார்.
நில நிர்வாக இணை கமிஷனர் ஜெ.மேகநாத ரெட்டி, வணிக வரிகள், அதிக வரி செலுத்துவோர் பிரிவு இணை கமிஷனராக மாற்றப்பட்டார். தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைக் கழகத்தின் மேலாண்மை இயக்குனர் டி.ஜெகனாதன், சமூக பாதுகாப்புத் திட்டங்கள் (வருவாய் நிர்வாக கமிஷனர் அலுவலகம்) இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
சமூக பாதுகாப்புத் திட்டங்கள் (வருவாய் நிர்வாக கமிஷனர் அலுவலகம்) கமிஷனர் அதுல் ஆனந்த், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் கமிஷனராக மாற்றப்பட்டார். வேளாண்மை கூடுதல் இயக்குனர் குமாரவேல் பாண்டியன், பெருநகர சென்னை மாநகராட்சி துணை கமிஷனராக (கல்வி) நியமிக்கப்பட்டார்.
பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் இயக்குனர் என்.வெங்கடாசலம், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைக் கழகத்தின் மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டார். சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையத்தின் (சி.எம்.டி.ஏ.) தலைமை செயல் அலுவலர் எம்.மதிவாணன், பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் இயக்குனராக முழு கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications