அதிமுகவை தொடர்ந்து ஆதரியுங்கள்... விஜய் ரசிகர்களிடம் அமைச்சர் வேண்டுகோள்!
அதிமுகவிற்கு விஜய் ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
நாமக்கல் : மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை ஆதரித்தது போல விஜய் ரசிகர்கள் தொடர்ந்து அதிமுகவை ஆதரிக்க வேண்டுமென்று அமைச்சர் தங்கமணி கேட்டுக் கொண்டுள்ளார்.
நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, நாமக்கல் எம்பி சுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பெண்களுக்கு தையல் மிஷின் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அமைச்சர் தங்கமணி வழங்கினார். இதனைத்தொடர்ந்து விஜய் ரசிகர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் தங்கமணி, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு விஜய் ரசிகர்கள் ஆதரவு அளித்தாகக் கூறினார்.
இதே போன்று தற்போதும் அதிமுக ஆட்சிக்கு விஜய் ரசிகர்கள் முழு ஆதரவையும் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஜெயலலிதாவின் ஆட்சிக்காக விஜய் ரசிகர்கள் துணையான இருந்தீர்கள், அதற்காக முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இனி வரும் காலங்களிலும் நீங்கள் அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று தங்கமணி பேசினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications