For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகம் முழுவதும் திட்டமிட்டபடி நாளை அனைத்துக் கட்சிகளின் மறியல்... ஸ்டாலின்

தமிழகம் முழுவதும் திட்டமிட்டபடி நாளை அனைத்து கட்சிகள் பங்கேற்கும் மறியல் போராட்டம் நடைபெறும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    பேருந்து கட்டணத்தை குறைத்தது தமிழக அரசு

    சென்னை: தமிழகம் முழுவதும் திட்டமிட்டப்படி நாளை அனுமதியை மீறி மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அனைத்து கட்சி கூட்டத்தில் திமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

    பேருந்து கட்டண உயர்வை கண்டித்து நேற்றைய தினம் திமுக போராட்டம் நடத்தியது. அதன் தொடர்ச்சியாக இன்று அனைத்து கட்சி கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. அதில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கலந்து கொண்டன.

    Tomorrow road roko throughout TN will be held, says MK Stalin

    அப்போது திமுக சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் விளக்கினார். அதில் மக்கள், எதிர்க்கட்சிகள், மாணவர்களின் போராட்டத்தை ஏற்று தமிழக அரசு பெயரளவுக்கு பேருந்து கட்டணத்தை குறைத்துள்ளது.

    பேருந்து கட்டணத்தை திரும்ப பெற கோரி நாளை திட்டமிட்டபடி மறியல் போராட்டம் நடைபெறும். மாநகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள், நகராட்சிகள், ஒன்றிய தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடைபெறும். உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை முமுமையாக ரத்து செய்ய வேண்டும்.

    பேருந்து கட்டண உயர்வாக போராடியவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும். நாளை நடைபெறவுள்ள மறியலுக்கு போலீஸ் அனுமதி தராவிட்டாலும் அனுமதியை மீறி போராட்டம் நடைபெறும்.

    கட்டண குறைப்பு என்பது அரசின் கண்துடைப்பு நாடகம் ஆகும் அனைத்து கட்சிகளின் கண்டன பொதுக் கூட்டம் நடத்தப்படும். மாநில அரசு எடுக்கும் முடிவை பொறுத்தே இந்த கண்டன பொதுக் கூட்டம் நடத்தப்படும் என்றார் ஸ்டாலின்.

    English summary
    DMK Working president MK Stalin says that tomorrow road roko will be held throughout TN against ADMK Government for not getting back the bus fare hike.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X