For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வேலை பார்க்காமல் சம்பளமா... கேள்விகளால் துளைக்கும் போக்குவரத்து தொழிற்சங்கம்

அரசு போக்குவரத்து கழகத்தில் பணி இல்லாமல் சம்பளம் வாங்கும் விவகாரத்தில் தொழிற்சங்கம் விளக்கம் கேட்பதால் அதிகாரிகள் ஆடி போய் உள்ளனர்.

Google Oneindia Tamil News

நெல்லை : அரசு போக்குவரத்து கழகத்தில் பணி இல்லாமல் சம்பளம் வாங்கும் ஊழியர்கள் விவகாரத்தில் தொழிற்சங்கம் விளக்கம் கேட்பதால் அதிகாரிகள் ஆடி பிரச்சனையில் சிக்கி உள்ளனர்.

நெல்லை அரசு போக்குவரத்து கழக கோட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் என 3 மண்டலங்கள் உள்ளது. இந்த மண்டலங்கள் மூலம் பல்வேறு வழி தடத்தில் சுமார் 2 ஆயிரம் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் டிரைவர், கண்டக்டர், தொழில்நுட்ப பணியாளர் என சுமார் 12 பேர் பணியாற்றி வருகின்றனர்.

Transport workers getting salary without job

இந்த நிலையில் இந்த அரசு போக்குவரத்து கழகத்தில் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் வேலை பார்க்காமல் சம்பளம் வாங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தினமும் பணிக்கு வந்தது போல் கையெழுத்திட்டு சம்பளம் வாங்கி செல்வதாக கூறப்படுகிறது.

இதற்கு அதிகாரிகள் ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த கோட்டத்தில் டிரைவர், கண்டக்டர், தொழில்நுட்ப பணியாளர் பற்றாக்குறை உள்ள நிலையில் இது போன்ற ஊழியர்களால் அரசு பஸ்சை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தொழிற்சங்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

பல ஊழியர்கள் மாற்று பணி என்ற போர்வையில் ஓய்வு பெற்ற பிறகும் வேறு பணிகளில் ஈடுப்படுத்தப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. மாற்று என்ற பெயரில் வேறு பணிக்கு செல்வதால் பஸ்சை இயக்குவது யார் என்று தொழிற்சங்கத்தினர் கேள்வி கேட்டு வருவது அதிகாரிகளை அங்கு கலக்கம் அடைய வைத்துள்ளது. விரைவில் இது பெரிய பிரச்சனையாக வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Transport workers getting salary without job in Thirunelveli. Chief officers need explanation about the issue from the department.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X