இன்னும் எரிகிறது மனசு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  பரிதாபம்! கந்து வட்டியின் கோரப்பசிக்கு கருகிய உயிர்கள்-வீடியோ
  Tribute to the Nellai Kandhu Vatti victims

  சென்னை: தீ தின்ற சிறு உயிர்
  வெந்து உரிந்த தோல்கள்
  காண்பவர் கண்களில்
  கண்ணீரும் செந்நீராக மாறி குமுறும்
  இன்னும் எத்தனை உயிர்
  இன்னும் எத்தனை ரத்தம்
  அன்று நீரில் மிதந்தது அய்லான்
  இன்று நெருப்பில் வெந்தது அட்சயா
  இன்னும் எத்தனை எத்தனை உயிர்?
  கொடும் செயல் கண்டு கொதித்த பாரதி மண்ணில்
  தொடர்ந்து உதிரும் குருதி
  காக்கும் கரங்கள் எங்கே?
  ஏழ்மை என்பது பாவமா?
  விடாமல் துரத்தும் சாபமா?
  குருதி குடிக்கும் வேட்டை நாய்களை
  வேட்டையாடுவது யார்?
  ரத்தம் சொட்டக் கூட வழியில்லாமல்
  பெற்ற வயிறும் பற்றி எரியும்
  ஆனால் அந்த உயிரும் வெந்து போனதே தீயில்!
  வெந்து முடிந்தன அந்த பிஞ்சுகள்
  ஆனால் இன்னும் எரிகிறது மனசு.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  3 of a family members including 2 kids were charred to death after a self immolation in Nellai collectorate today. Here is a Tribute to the vicitms.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற