தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம்: சென்னையில் டெல்லி போலீஸ்... எந்த நேரத்திலும் தினகரன் கைது?
தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் தினகரன் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்கிறது டெல்லி போலீஸ்.
சென்னை: இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுத்த வழக்கில் டிடிவி தினகரன் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்கின்றன டெல்லி போலீஸ் வட்டாரங்கள்.
சசிகலாவைத் தொடர்ந்து அதிமுகவை கபளீகரம் செய்த தினகரன் முதல்வர் பதவிக்கும் குறிவைத்தார். ஆனால் மத்திய பாஜக அரசு இதை விரும்பவில்லை.

அனைத்து அஸ்திரங்களும்...
சசிகலா, தினகரன் இல்லாத அதிமுகவையே மத்திய பாஜக அரசு விரும்புகிறது. இதனால்தான் தினகரனை விரட்டியடிப்பதற்கான அனைத்து அஸ்திரங்களும் ஏவப்பட்டு வருகின்றன.

கோஷ்டிகள் இணைப்பு
இதனைத் தொடர்ந்தே ஓபிஎஸ், எடப்பாடி கோஷ்டிகள் பேச்சுவார்த்தைக்கு குழுக்கள் அமைத்தன. இதற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்தாலும் வேறுவழியில்லாத நிலையில் இருக்கிறார் தினகரன்.

சென்னையில் டெல்லி போலீஸ்
அதுவும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுத்ததாக வழக்கு தொடரப்பட்ட நிலையில் தினகரனால் எதுவும் செய்ய முடியாத நிலை உருவாகிவிட்டது. இந்த நிலையில் தினகரனை விசாரணைக்கு அழைத்துச் செல்ல சம்மனுடன் டெல்லி போலீஸ் சென்னையில் முகாமிட்டுள்ளது.

எந்த நிமிடத்திலும் கைது
விசாரணைக்கு டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கேயே தினகரனை கைது செய்து திகார் சிறையில் அடைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் தினகரனால் அவ்வளவு எளிதாக தப்பிவிட முடியாது என்கிறது டெல்லி போலீஸ்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications