இரட்டை இலை பெற லஞ்சம்... வக்கீல்களுடன் டிடிவி தினகரன் அவசர ஆலோசனை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் டெல்லி போலீஸாரின் கைது நடவடிக்கையை தவிர்க்க சென்னையில் உள்ள வீட்டில் வழக்கறிஞர்களுடன் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

சுகேஷ் சந்திரசேகர் என்ற புரோக்கர் மூலம் இரட்டை இலை சின்னத்தைப் பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் தர முயற்சித்து சிக்கியுள்ளார் தினகரன். இதற்காக ரூ.60 கோடி வரை பேரம் பேசியுள்ளார். இதில் ரூ. 1.03 கோடி பணத்துடன் சுகேஷ் கைதாகியுள்ளார்.

TTV Dinakaran is discussing with lawyers for anticipatory bail

இந்த வழக்கில் தினகரனும் கைதாகவுள்ளார். அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கி்ல் முதல் குற்றவாளியாக டிடிவி தினகரனின் பெயர் சேர்க்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அவருக்கு சம்மன் கொடுக்க டெல்லி போலீஸார் சென்னையில் முகாமிட்டுள்ள நிலையில் பெசன்ட் நகரில் உள்ள தனது வீட்டில் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முன்ஜாமீன் பெறுவது குறித்து ஆலோசனை நடத்தியிருக்கலாம் என்று தெரிகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Delhi police arrived chennai to handover summon regarding bribe case. TTV Dinakaran is discussing with his lawyers to get anticipatory bail.
Please Wait while comments are loading...