'ஸ்லீப்பர் செல்' புகழ் தினகரனும் பாஜகவின் ஆபரேஷன் திராவிடத்தின் அங்கம்?

அதிமுகவில் ஸ்லீப்பர் செல் இருப்பதாக தொடர்ந்து சொல்லி வரும் டிடிவி. தினகரன் உண்மையில் யாருடைய ஸ்லீப்பர் செல் ஒரு வேளை இவரும் ஆபரேஷன் திராவிடத்தின் ஒரு அங்கமா?

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    உண்மையில் தினகரன் தான் பாஜக-வின் ஸ்லீப்பர் செல்லா ?

    சென்னை : அதிமுகவில் இருந்து விலகியதாக அல்லது நீக்கப்பட்டதில் இருந்து டிடிவி. தினகரன் தொடர்ந்து சொல்லி வருவது தனக்கான ஸ்லீப்பர் செல் எம்பி, எம்எல்ஏக்கள் இருக்கின்றனர் என்பது தான். ஆனால் இன்று வரை அந்த ஸ்லீப்பர் செல்கள் வெளிவந்ததாக தெரியவில்லை, ஆனால் ஒரு வேளை பாஜக போடும் ஆபரேஷன் திராவிடத்துக்கான ஸ்லீப்பர் செல்லாக தினகரன் இருக்கலாம் என்ற பார்வையில் அரசியல் லென்ஸ் பார்வை நீள்கிறது.

    தெலுங்கு நடிகர் சிவாஜி போட்டு உடைத்த ஆபரேஷன் திராவிடம் ரகசியம் தமிழக அரசியலில் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. ஏனெனில் தென் இந்தியாவை குறிவைத்து காய் நகர்த்த ரூ.4,800 கோடியில் ஆபரேஷன் திராவிடம் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் சொன்ன காரணங்களும் தமிழக அரசியலில் அரங்கேறும் நிகழ்வுகளும் அச்சு அசலாக ஒத்துபோகின்றன.

    பாஜக மாநிலக் கட்சிகளோடு கைகோர்த்துக் கொண்டு ஸ்லீப்பர் செல்கள் மூலம் ஆட்சியை கைபற்ற நினைக்கிறது என்பது தான் ஆபரேஷன் திராவிடத்தின் அஜென்டா. ஏற்கனவே இதற்கான பணிகளை பாஜக தொடங்கிவிட்டதாகவும் 2019 தேர்தல்களில் தென்இந்தியாவில் கால்தடம் பதிக்கவே இந்த முயற்சி என்றும் போட்டு உடைத்தார் தெலுங்கு நடிகர்.

     யார் பாஜகவின் ஸ்லீப்பர் செல்?

    யார் பாஜகவின் ஸ்லீப்பர் செல்?

    இதில் முக்கியமாக பார்க்க வேண்டிய விஷயம் தமிழகத்தில் பாஜகவின் ஸ்லீப்பர் செல்களாக யார் இருக்கிறார்கள் என்பது தான். அதிமுக அரசை பின்னால் இருந்து பாஜக இயக்கி வருவதாக தொடக்கம் முதலே கூறப்படுகிறது, இதற்கு ஏற்ப துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பிரதமர் நரேந்திர மோடி சொல்லி தான் அதிமுகவில் மீண்டும் இணைந்தேன் என்றார். மக்களுக்கும், கட்சியினருக்கும் அதிமுகவை பிரித்து பிரித்து சேர்த்ததில் பாஜகவின் பங்கு இருப்பதை ஓபிஎஸ்ன் இந்த வெளிப்படை பேச்சு உறுதி செய்தது.

     பாஜகவிற்கு எதிரான நிலைப்பாடு

    பாஜகவிற்கு எதிரான நிலைப்பாடு

    எனினும் ஆர்கே நகர் தேர்தலுக்குப் பிறகு அதிமுக அமைச்சர்கள் பாஜகவை விமர்சித்து வருகின்றனர். அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் இனி பாஜகவுடன் ஒட்டும் வேண்டாம் உறவும் வேண்டாம் என்கிற ரீதியில் பாஜகவை வசைபாடினர். மத்திய அரசுடன் இணக்கமாக சென்றால் தான் நிதி கிடைக்கும் என்று சொன்னவர்களே இப்படி பேசுகிறார்கள் என்றால் அதிமுக இடத்தில் ஒரு மாற்றம் வந்திருக்கிறது என்று கட்சியினர் கருதினர்.

     அண்ணா, திராவுடம் இல்லாத அணி

    அண்ணா, திராவுடம் இல்லாத அணி

    இதனிடையே அதிமுகவை மீட்பேன் என்று தொடர்ந்து சொல்லி வந்த டிடிவி. தினகரன், தேர்தல் அடையாளத்துக்காக தனிக்கட்சி என்று சொல்லி கடைசியில் தனிக் கட்சியல்ல தனி அணி என்று சொல்லி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை அறிவித்தார். அதிமுக தான் எங்கள் உயிர் மூச்சு என்று சொல்லி வந்த தினகரன் தனது அணிப் பெயரிலும், கட்சிக் கொடியிலும் திராவிடத்தையும், அண்ணாவையும் ஒதுக்கியது ஏன் என்ற கேள்வி எழுந்தது.

     திராவிட பின்னணி இல்லாமலா

    திராவிட பின்னணி இல்லாமலா

    அண்ணாவும் திராவிடமும் இல்லாமல் அதிமுக ஏது? அப்படியானால் பாஜகவிற்கு இசைவாகத்தான் தினகரன் தன்னுடைய அணியில் இருந்து வேண்டுமென்றே இந்த இரண்டையும் தவிர்த்தாரா? அண்ணாவும், திராவிடமும் இல்லாதது அடிப்படை கொள்கைக்கே பங்கம் என்று தினகரனை விட்டு வெளியேறிவிட்டார் நாஞ்சில் சம்பத். தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் பின்னணி இல்லாமல் அரசியல் கட்சி இல்லை என்பதால் தான் விஜயகாந்தும் தனது கட்சிப் பெயரில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்று அறிவித்தார்.

     அமைதி காக்கும் தினகரன்

    அமைதி காக்கும் தினகரன்

    ஆக அரசியலுக்கு புதிதாக வந்தவரே அப்படியென்றால் அதிமுகவை பின்னால் இருந்து இயக்கி வந்த மன்னார்குடி குடும்பத்தை சேர்ந்த தினகரன் தொடங்கிய கட்சியில் அண்ணாவும் திராவிடமும் இல்லாமல் போனது வியப்பானதாகத் தான் இருக்கிறது. பாஜகவிற்கு சாதகமாகத் தான் இப்படி தினகரன் அறிவித்தாரோ. பாஜகவின் அடிப்படை கொள்கைகளை எதிர்த்து அரசியலுக்கு வந்தவராக தினகரன் தன்னை காட்டிக்கொண்டாலும் அவருடைய தற்போதைய அடக்கி வாசிக்கும் தன்மை இந்த சந்தேகங்களை உறுதிபடுத்துகின்றன.

     தினகரனை வைத்து காலி செய்ய திட்டமா?

    தினகரனை வைத்து காலி செய்ய திட்டமா?

    மற்றொரு புறம் பாஜகவின் நேரடி டார்கெட்டாக தமிழகத்தில் இருப்பது திமுக தான். சிறுபான்மையினரின் ஓட்டுகள் திமுகவிற்கு போய்விடக்கூடாது என்பதில் பாஜக கண்கொத்தி பாம்பாக கவனம் செலுத்தி வருகிறது, இதற்காக பயன்படுத்தப்படும் காய் தான் தினகரனா என்பதும் சிந்திக்க வேண்டியுள்ளது.

     தினகரன் யாருடைய ஸ்லீப்பர் செல்

    தினகரன் யாருடைய ஸ்லீப்பர் செல்

    அதிமுகவில் எம்.பி, எம்.எல்.ஏக்கள் தன்னுடைய ஸ்லீப்பர் செல்களாக இருக்கிறார்கள் என்று தினகரன் தொடர்ந்து சொல்லி வருகிறார். ஆனால் இது நாள் வரை எந்த ஸ்லீப்பர் செல்லும் வெளிவந்ததாக தெரியவில்லை. 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வந்தபின்னர் முதல்வர் பழனிசாமிக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் அப்போது ஸ்லீப்பர் செல் வெளிவரும் என்கிறார் தினகரன். ஆனால் போகிற போக்கைப் பார்த்தால் இவர் தான் யாருக்கோ ஸ்லீப்பர் செல்லாக செயல்படுகிறார் என்பதை மட்டும் தான் இப்போதைக்கு யூகிக்க முடிகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+