அழிக்க நினைச்சீங்க.. காணாம போய்டுவீங்க.. தினகரனுக்கு ஜெயக்குமார் சாபம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கல்பாக்கம்: அதிமுகவை அழிக்க நினைக்கும் டிடிவி தினகரன் காணாமல் போய்விடுவார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரனுக்கும் தமிழக அரசுக்கும் ஏற்பட்டுள்ள மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அமைச்சர்கள் மற்றும் அரசு மீது தினகரன் தரப்பும், தினகரன் மீது அமைச்சர்களும் என மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர்.

TTV Dinakaran, who wants to destroy the ADMK, will disappear : Minister Jayakumar

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். எப்படியாவது குறுக்கு சால் போட்டு ஆட்சியை கவிழ்த்துவிடலாம் என தினகரன் நினைப்பதாக அவர் கூறினார்.

தினகரனின் பகல்கனவும் ஒருபோதும் பலிக்காது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். அப்போது டிடிவி தினகரன் என்ன சூழ்ச்சி செய்தாலும் அதிமுக ஆட்சியையும் கட்சியையும் அசைத்துக் கூட பார்க்க முடியாது என்று அவர் கூறினார்.

அதிமுகவை அசைத்துப் பார்க்க நினைத்தவர்கள் எல்லாம் அடையாளம் தெரியாமல் போயுள்ளனர். அந்தப்பட்டியலில் தினகரனும் நிச்சயம் இருப்பார் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Minister Jayakumar said that TTV Dinakaran, who wants to destroy the AIADMK, will disappear. No one can shake the ADMK ruling and party he said.
Please Wait while comments are loading...