இனி தினகரனும், திவாகரனும் ஒன்னு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: எதிரும் புதிருமாக இருந்த தினகரனும், திவாகரனும் ஒருவருக்கொருவர் கைகோர்த்து இணைந்துள்ளனர். சக்ரவியூகத்தில் சிக்கிய அபிமன்யூ போல இருக்கும் அதிமுகவை மீட்போம் என்றும் கூறியுள்ளனர்.

சசிகலாவின் தம்பி திவாகரன் அதிமுகவில் செல்வாக்கு மிக்கவராக இருந்தார். ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு அதிமுகவில் பல அரசியல் நிகழ்வுகள் நடந்து வருகின்றன.

TTV Dinakran joins hands with Divakaran

திவாகரனும், டிடிவி தினகரனும் எதிரும் புதிருமாக இருந்தனர். இப்போது சசிகலாவின் அண்ணன் மனைவி சந்தானலட்சுமி மரணம் இவர்களை ஒன்றாக இணைத்துள்ளது.

தஞ்சாவூரில் இருவரும் அருகருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். செய்தியாளர்களிடம் பேசிய திவாகரன், தங்களின் இணைப்பு பற்றி விளக்கம் அளித்தார்.

என்னுடைய மூத்த அண்ணன் சுந்தரவதனம் மனைவி சந்தானலட்சுமி மரணமடைந்து விட்டார். சென்னையில் உயிர் பிரிந்தது தஞ்சையில் நல்லடக்கம் செய்யப் போகிறோம்.

இந்த செய்தியை கேள்விப்பட்டு அதிமுகவினர் வந்து அஞ்சலி செலுத்துகின்றனர். தொண்டர்கள் எங்களின் அண்ணியாருக்கு அஞ்சலி செலுத்துகின்றனர். அண்ணியாரின் பங்கும் மறைமுகமாக இருந்தது.

துணை பொதுச்செயலாளர் தினகரனிடம் சில கேள்விகள் வைக்கப்பட்டது. துக்கத்திற்கு வருவதும் வராமல் போவது சொந்த விருப்பு வெறுப்பு

எங்கள் மீது அக்கறை உள்ளவர்கள் எங்களை பார்த்து துக்கம் விசாரித்து விட்டு செல்கின்றனர். ஆட்சி வேறு, பதவி வேறு. அதிமுக தொண்டர்கள்தான் இன்றைக்கு வந்து நிற்கின்றனர்.

டாக்டர் வெங்கடேஷ்க்கும் வந்து ஆதரவை தெரிவித்து வருகின்றனர். என்னுடைய சகோதரி சிறையில் இருக்கிறார். இது அதிமுகவிற்கு சோதனையான காலம். மகாபாரதத்தில் போர்களத்தில் சக்ரவியூகத்தில் சிக்கிய அபிமன்யூ போல சிக்கியுள்ளது.

கிருஷ்ணன் இல்லாததால் அபிமன்யூ மரணமடைந்து விடுவார். அதுபோல அதிமுக உள்ளது. அதை காக்க நாங்கள் பாடுபடுவோம். அனைவரும் ஒன்றாக இணைந்து அதிமுகவை காப்போம் என்று திவாகரன் கூறினார்.

Egmore Court Has Filed Charges Against TTV Dinakaran in FERA Case | Oneindia Tamil

எடப்பாடி பழனிச்சாமி அரசு நன்றாகவே நடந்து கொண்டிருக்கிறது. அதை குறை சொல்ல முடியாது என்றும் திவாகரன் கூறியுள்ளார். இருவரும் இணைந்துள்ளதால் தமிழக அரசியல் மீண்டும் ஒரு பரபரப்பான கட்டத்தை நோக்கி நகர்கிறது,

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TTV Dinakaran and Divakaran have joined together today with tears.,
Please Wait while comments are loading...