சத்தியபாமா அல்ல.. அவங்க பெயர் "பெட்டி பாமா".. தாராபுரம் பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலின் கிண்டல்!

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: தவெக வேட்பாளர் சத்தியபாமா என்ற பெயரை தற்போது "பெட்டி பாமா" என்று மாற்றிவிட்டதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கிண்டல் செய்துள்ளார். அதிமுகவில் இருந்து கிட்டத்தட்ட 7 எம்எல்ஏ-க்களை பெட்டி கொடுத்து முதல்வர் விஜய் தூக்கி உள்ளதாக கூறிய உதயநிதி ஸ்டாலின், திமுக கூட்டணியில் இருந்த சிலர் முதுகில் குத்திவிட்டதாகவும் சாடியுள்ளார்.

தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தாராபுரம் தொகுதியில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றன.

Udhayanidhi Stalin

அந்த வகையில் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், மதுராந்தகத்தில் 30 நிமிடங்கள் பேசிய முதல்வர் விஜய், 32 முறை திமுக பெயரை தான் பேசியுள்ளார். இப்போது பிக் பாஸ் நடப்பதை போல், முன்னதாக சட்டசபை எனும் பிக் பாஸ் நடைபெற்றது.

எதிர்க்கட்சிகள் சட்டசபையில் மக்கள் பிரச்சனையை தான் பேசுகிறோம். ஆனால் முதல்வர் விஜய் வாயை திறந்து பேசாமல், பிடிச்சு வச்ச பிள்ளையார் மாதிரி இருக்கிறார். தண்ணீர் வரவில்லை என்று கூறியதற்கு கோபம் வந்துவிட்டது. சட்டசபையில் பாட்டு பாடினால் நாங்கள் என்ன செய்வது? சட்டசபையிலேயே நான் இங்கு என்ன சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியா நடக்குது என்று கேட்டேன்.

சபாநாயகர் ஆக்‌ஷன் என்று சொன்னவுடன் முதல்வர் விஜய் நடிக்க தொடங்கிவிட்டார். 2 ஆண்டுகளாகவே விஜய் ஒரே விஷயத்தை தான் பேசி கொண்டிருக்கிறார். பழைய டேப் ரெக்கார்டரை போல் 32 முறை திமுக, திமுக.. என்று பேசிக் கொண்டிருக்கிறார். நம்மைவிட அதிகமாக திமுக தொடர்பாக பேசுகிறார். தேர்தலின் போது தவெக அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.

ரெண்டே ரெண்டு பேருக்கு இடையில் தான் போட்டி. ஒன்று மின்வெட்டு.. மற்றொன்று அரிவாள் வெட்டு.. அதேபோல் தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமா என்ற பெயரை தற்போது "பெட்டி பாமா" என்று மக்கள் மாற்றிவிட்டார்கள். அதிமுகவில் இருந்து கிட்டத்தட்ட 7 எம்எல்ஏ-க்களை பெட்டி கொடுத்து தூக்கியுள்ளார் விஜய்.. திமுக எம்எல்ஏ-க்களை பார்த்தால் வழக்கு.. அதிமுக எம்எல்ஏ-க்களை பார்த்தால் பெட்டி..

திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற சிலர் எதுவுமே சொல்லாமல் திருட்டுத்தனமாக சென்றுவிட்டார்கள். கூட்டணி கட்சியினர் சிலர் ஸ்டாலினிடம் சொல்லிவிட்டு சென்றனர். சிலர் முதுகில் குத்திவிட்டு சென்றனர். எல்லா கட்சித் தலைவர் வீட்டிற்கும் முதல்வர் சென்று சோபா டெலிவரி செய்தார். மீண்டும் சத்தியபாமாவை ஜெயிக்க வைத்தால், வேறு கட்சிக்கு சென்றுவிடுவார் என்றும் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+