கமலுக்கு ஆதரவா இருக்குறதுல என்ன தப்பு... கொடிபிடிக்கும் உதயநிதி ஸ்டாலின்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழக அரசை விமர்சித்த நடிகர் கமல்ஹாசனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியில் ஆதரவு அளித்தது சரியே என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பீஹாரை விட தமிழகத்தில் ஊல் மலிந்து கிடப்பதாக நடிகர் கமல்ஹாசன் கூறியதற்கு கடந்த இரண்டு நாட்களாக அமைச்சர்கள் வரிந்து கட்டிக் கொண்டு வசைபாடி வருகின்றன. இந்நிலையில் ஓட்டு போடும் அனைவருக்கும் கருத்து சொல்ல சுதந்திரம் உள்ளது, கமலின் கருத்துக்கு அமைச்சர்கள் விமர்சனங்களை முன் வைப்பது ஜனநாயக உரிமை மீறல் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறியிருந்தார்.

 Udhayanidhi supporting Kamalhassan said nothing wrong

இந்நிலையில் கமலின் கருத்து குறித்து பேசியுள்ள தளபதி ஸ்டாலினின் வாரிசு உதயநிதி, நடிகர் கமல்ஹாசன் ஒரு ஜுனியஸ்,அவருக்குத் தோன்றியதை அவர் கூறியிருக்கிறார். எப்போதும் சில விஷயங்களில் தைரியமாக சொல்வதில் கமல் மட்டுமே சிறந்தவர்.

Minister Anbazhagan insulting Actor Kamalhassan-Oneindia Tamil

சினிமாவில் இருக்கும் கலைஞனாக அவர் கூறிய கருத்து சரியானது என்பதே என்னுடைய கருத்து. அதே போன்று அரசு தொடர்பான கருத்தை கூறியது சரிதான் என்பதால் அரசியல் ரீதியில் அப்பா ஸ்டாலின் ஆதரவு தெரிவித்திருக்கிறார் என்றும் உதயநிதி கூறியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actor Udhayanidhi saying nothin wrong Kamalhassan said and like in the political form daddy gave support to him.
Please Wait while comments are loading...