For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

யார் யாரோ பேப்பரை திருத்துறாங்க சார்... சென்னை பல்கலை. முனைவர் தேர்வில் பெரிய அளவில் குளறுபடி!

சென்னையில் இருக்கும் பாரம்பரியமான சென்னை பல்கலைக்கழகத்தின் முனைவர் தேர்வில் பெரிய அளவில் குளறுபடி நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் இருக்கும் பாரம்பரியமான சென்னை பல்கலைக்கழகத்தின் முனைவர் தேர்வில் பெரிய அளவில் குளறுபடி நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து கடந்த சில நாட்களாக நிறைய குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில் தற்போது அங்கு நடந்த குளறுபடிகள் அனைத்தும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அதன்படி முனைவர் தேர்வுகளில் தகுதியே இல்லாத பல பேர் தேர்வு நடத்தும் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. நிறைய பேர் வெளிநாட்டு தேர்வாளர்கள் என்று கூறி தேர்வு அதிகாரிகளாக சென்னை பல்கலைக் கழகத்தில் வேலை பார்த்தது தெரிய வந்துள்ளது.

இந்த பிரச்சனை பல நாட்களாக நிலவி வந்ததும் யாரும் இது பற்றி பேசாமல் இருந்திருக்கின்றனர். இது பற்றி வெளியே பேச நினைப்பவர்களும் மிரட்டப்பட்டு வந்து இருக்கின்றனர் என அதிர்ச்சியான தகவல்கள் வெளியே வந்து இருக்கின்றது.

 மெட்ராஸ் பல்கலைக்கழக விதிமுறை

மெட்ராஸ் பல்கலைக்கழக விதிமுறை

சென்னை பல்கலைக்கழகத்தின் தேர்வு விதிமுறையின் படி அங்கு நடக்கும் முனைவர் பட்டத்திற்கான தேர்வுகளில் தேர்வாளராக இருக்கும் 3 பேரில் ஒரு நபர் கண்டிப்பாக வெளிநாட்டை சேர்ந்தவராக இருக்க வேண்டும். மேலும் அந்த ஒரு வெளிநாட்டவரும் முனைவர் பட்டம் பெற்ற முதல்நிலை பல்கலைக்கழகம் ஒன்றில் வேலை செய்யும் ஆசிரியராக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவை சேர்ந்த மற்ற இரண்டு ஆசிரியர்களும் முதல்நிலை பல்கலைக்கழகத்தில் வேலை பார்க்கும் நபராக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

 சென்னை பல்கலைக்கழத்தில் குளறுபடி

சென்னை பல்கலைக்கழத்தில் குளறுபடி

இந்த நிலையில் இந்த தேர்வு முறையில் குளறுபடி நடந்து இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி வெளிநாட்டு பல்கலைக் கழகத்தை சேர்ந்த பேராசிரியர்களை நியமிப்பதற்கு பதிலாக இந்தியாவை சேர்ந்த சிலரை வெளிநாட்டு பேராசிரியர்கள் என்று பொய்யாக கூறி ஏமாற்றி இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் டெல்லி பல்கலைக்கழகத்தில் இருக்கும் சிலரும் இந்த முறைகேட்டில் வெளிநாட்டு பேராசிரியர்கள் என்று கூறி ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.

 எப்படி நடந்தது

எப்படி நடந்தது

இந்த முறைகேட்டிற்கு இவர்கள் மிகவும் வித்தியாசமான முறையை பயன்படுத்தி இருக்கின்றனர். அதன்படி அவர்களை பல்கலைக்கழகத்தில் வேலை பார்த்து பணி ஒய்வு பெற்ற பேராசிரியர்களை வெளிநாட்டிற்கு அனுப்பி அவர்களை பின் வெளிநாட்டு பேராசிரியர்கள் என தேர்வு எழுத வந்தவர்களிடம் கூறியிருக்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் இந்தியாவில் இருக்கும் மற்ற பல்கலைக்கழகங்களின் சில பேராசிரியர்களையும் இந்த முறைகேட்டில் ஈடுபடுத்தி இருக்கின்றனர்.

 முறைகேடு எப்படி கண்டிபிடிக்கப்பட்டது

முறைகேடு எப்படி கண்டிபிடிக்கப்பட்டது

சில நாட்களுக்கு முன்பும் இங்கு நடத்த முனைவர் தேர்வில் இந்த முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றது. அதில் ஒரு பேராசிரியரே வெளிநாட்டு ஆசிரியர் , உள்நாட்டு ஆசிரியர் என இரண்டு பணிகளையும் செய்து இருக்கிறார். ஆனால் கையெழுத்து மட்டும் வெளிநாட்டு பேராசிரியருக்காக வேறு ஒருவர் போட்டு இருக்கிறார். இதையடுத்து கல்லூரியின் துணை வேந்தரிடம் இது குறித்து புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.

 மிரட்டப்படும் பல்கலைக்கழக ஆசிரியர்கள்

மிரட்டப்படும் பல்கலைக்கழக ஆசிரியர்கள்

இந்த பிரச்சனை பல நாட்களாக நிலவி வந்ததும் யாரும் இது பற்றி பேசாமல் இருந்திருக்கின்றனர். இப்படி ஒரு பிரச்சனை இருப்பதும் பலருக்கும் தெரிந்தே நடந்து இருக்கிறது. இது பற்றி வெளியே பேச நினைப்பவர்களும் மிரட்டப்பட்டு வந்து இருக்கின்றனர் என அதிர்ச்சியான தகவல்கள் வெளியே வந்து இருக்கின்றது. இதுகுறித்து முதன்முதலாக வெளியே பேசிய ரிதா ஜான் என்ற பேராசிரியருக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வந்த வண்ணம் இருக்கிறது. இதில் நிறைய மிரட்டல்கள் அரசியல்வாதிகளிடம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

 என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும்

என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும்

இந்த நிலையில் இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பல்கலைக்கழக துணைவேந்தர் பி. துரைசாமி கூறியுள்ளார். இந்த மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் சிங்கப்பூர், நைஜிரியா, மற்றும் எத்தியோப்பியா பேராசிரியர்கள் இனி பல்கலைக் கழக தேர்வில் முறைகளில் ஈடுபடுவதில் இருந்து தடை செய்யப்பட்டு இருக்கின்றனர். மேலும் பல்கலைக் கழகத்திற்குள் இருக்கும் பேராசிரியர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

English summary
University of Madras has unearthed the unrecognised foreign PhD examiners in countries like Singapore, Nigeria and Ethiopia. These profosers are one who evaluate multiple theses of the varsity's research scholars at a time, and they have blacklisted by University now.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X