சென்னையில் பேருந்து மீது கல்வீச்சு.. கண்ணாடி உடைப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil
  பேருந்து மீது கல்வீச்சால் பரபரப்பு- வீடியோ

  சென்னை: தண்டையார் பேட்டை- எண்ணூர் நெடுஞ்சாலையில் மர்மநபர்கள் நடத்திய கல்வீச்சில் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது.

  தமிழகம் முழுவதும் இரண்டாவது நாளாக இன்றும் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவையும் மீறி சென்னை உட்பட பல இடங்களில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளனர்.

  Unknown persons throwing stones on the bus in Chennai Thandaiyarpettai

  இதனால் மிகக்குறைந்த அளவிலான அரசுப் பேருந்துகளே இயக்கப்பட்டு வருகிறது. தற்காலிக ஓட்டுநர்களை கொண்டு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றனர்.

  இந்நிலையில் சென்னை தண்டையார் பேட்டை - எண்ணூர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த 44சி பேருந்தின் மீது மர்மநபர்கள் சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது.

  கல்வீச்சு குறித்து ஆர்கே நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் மட்டும் இதுவரை 22 பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன.

  பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! தமிழ் மேட்ரிமோனி

  English summary
  Unknown persons throwing stones on the bus in Chennai Thandaiyarpettai. Bus windowns damaged. RK Nagar police filed case and inquire.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற