நடிகர்களைவிட கேவலமானவரா வைகோ? சமூக வலைதளங்களில் பொங்கும் மதிமுக

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தினத்தந்தி பவளவிழா நிகழ்ச்சியில் மதிமுக பொதுச்செயலர் வைகோவை 2-வது வரிசையில் உட்கார வைத்ததற்கு அக்கட்சியினர் சமூக வலைதளங்களில் குமுறியுள்ளனர்.

தினத்தந்தி பவளவிழாவில் பிரதமர் மோடி இன்று பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற வைரமுத்து, அபிராமி ராமநாதன், நடிகை சரோஜாதேவி, நடிகர்கள் பிரபு, சரத்குமார் உள்ளிட்டோரும் தமிழக அமைச்சர்களும் முன்வரிசையில் அமர்ந்திருந்தனர்.

Vaiko seated in 2nd row at PM Modi function

2-வது வரிசையில் மதிமுக பொதுச்செயலர் வைகோ, மல்லை சத்யா, முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர். இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள மதிமுக நிர்வாகிகள், நடிகர்களுக்கு முன்வரிசையிலும் வைகோ உள்ளிட்டோருக்கு பின்வரிசை ஒதுக்கியதும் கண்டிக்கத்தக்கது. நடிகர்களை விட கேவலமானவரா வைகோ என கொந்தளித்து கொண்டிருக்கிறார்கள்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! தமிழ் மேட்ரிமோனி

English summary
MDMK Cadres upset over their General Secretary Vaiko was seated in second row at PM Modi Function on Monday.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X