For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சேலை கட்டி வந்த நிலவோ… வள்ளியம்மாள் கல்லூரி மாணவிகளைப் பார்த்து இப்படி பாடலாம் (போலீஸ் பிடிக்காட்டி)

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் வாரம் ஒரு நாள் சேலை கட்டி கலக்கும் வள்ளியம்மாள் கல்லூரி மாணவிகள் சேலையே அழகு என்று முந்தானை படபடக்க அடித்து சொல்கிறார்கள்.

நெசவாளர்களுக்கு உதவுவதற்காக இந்த ஒரு நாள் அனைவரும் கைத்தறிப்புடவை கட்டி வருகின்றனர்.

எத்தனை மார்டன் டிரஸ் வந்தாலும் நம்ம சேலைக்கு நிகர் ஏதுமில்லை என்பது இந்த கல்லூரி மாணவிகளின் வாதம்.

தமிழ்பெண் கம்பீரம்:

தமிழ்பெண் கம்பீரம்:

பி.ஏ. படிக்கும் அனிதாவிடம் 100 சேலை இருக்கிறதாம் (அப்பா பாவம்!). சுடியிலும், ஜீன்சிலும் வரும் தோழிகளோடு நாங்களும் செல்லும் போது தமிழ் பெண் என்ற கவுரவம் கிடைக்கிறது.

முன்மாதிரி மாணவிகள்:

முன்மாதிரி மாணவிகள்:

சேலை கட்டி செல்வதை யாரும் வெறுப்புடன் பார்ப்பதில்லை. பொண்ணுன்னா இப்படித்தான் இருக்கணும் என்று ஒரு முன் மாதிரியாகத்தான் எங்களை அடையாளம் காட்டுகிறார்கள் என்றார்கள் மாணவிகள்.

கைத்தறி புடவையில் மயில்கள்:

கைத்தறி புடவையில் மயில்கள்:

ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் கைத்தறி புடவையில் மைதானத்தில் அணிவகுத்து சென்றது பல வண்ண பட்டாம்பூச்சிகளாய் பரவசப்படுத்துகின்றது (பாரதி படத்து மயில் போல பொண்ணு ஒன்னு பாட்டுதான் நினைவுக்கு வருகிறது).

அழகுனா அது புடவைதான்:

அழகுனா அது புடவைதான்:

22 நாடுகளை சுற்றி வந்து விட்டேன். நம்ம சேலையும், வசீகர தோற்றமும், சிரித்து பேசும் அன்பான உபசரிப்பும் தான் உலக நாடுகளில் நமக்கு அங்கீகாரத்தை தருகிறது என்றார் கல்லூரி முதல்வர் டி.வி.எஸ். பத்மஜா.

பிடித்துப் போன கலாச்சாரம்:

பிடித்துப் போன கலாச்சாரம்:

அவர் மேலும் கூறும் போது, நமது பாரம்பரிய உடையை பெண்கள் மறந்து விடக்கூடாது என்பதற்காக வாரம் ஒரு நாள் சேலை கட்டும் பழக்கத்தை அறிமுகப்படுத்தினோம். இப்போது பல மாணவிகளுக்கு அதுவே பிடித்து விட்டது. தினமும் கூட சேலை அணிந்து வருகிறார்கள் என்றார்.

நெசவாளார்களுக்கு சமர்ப்பணம்:

நெசவாளார்களுக்கு சமர்ப்பணம்:

கலாச்சாரத்தின் பின்னணியில் நெசவாளர்களின் உயர்வுக்கும் கைகொடுப்போம் என்ற உணர்வு மதித்தும் போற்றத்தக்க ஒன்றாகும்.

English summary
Valliamal College celebrates saree day in every Friday. All the girl students wear saree on that day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X