நடுரோட்டில் விசிக பிரமுகரும் டிராபிக் போலீஸும் மோதல்: வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஊட்டி: சாலை விதிகளைமீறி சாலையைக் கடக்க முயற்சித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகருக்கும் டிராபிக் போலிஸுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஊட்டி லெவல்கிராசிங் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் சுதாகர் தன் இருசக்கர வாகனத்தில் விதியை மீறி சாலையைக் கடக்க முயன்றுள்ளார். சுதாகர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய பொறுப்பில் உள்ளார்.

 Vck sudhagar and traffic police fought middle of a main road

அதைக் கவனித்த டிராபிக் போலீஸ் பஷீர், சாலையை இப்போது கடக்க வேண்டாம் என கூறியுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உடனே ஒருவரை ஒருவர் நடுரோட்டில் தாக்கிக்கொண்டுள்ளனர்.

இதையடுத்து இருவருமே காயமடைந்துள்ளனர். அதன்பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு உண்டானது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Viduthalai siruththaikal katchi sudhakar and traffic police fought each other in main road and got admitted in hospital
Please Wait while comments are loading...