விடாத வெற்றிவேல்... கொறடா ராஜேந்திரனை நீக்கக் கோரி சபாநாயகரிடம் மனு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : அதிமுக கொறடா ராஜேந்திரனை நீக்கக் கோரி சபாநாயகர் தனபாலை சந்தித்து எம்எல்ஏ வெற்றிவேல் மனு அளித்துள்ளார்.

சென்னைத் தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் தனபாலை இன்று அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி. தினகரனின் தீவிர ஆதரவாளர் வெற்றிவேல் எம்எல்ஏ சந்தித்தார். அப்போது அதிமுக கொறடா ராஜேந்திரனை நீக்க வலியுறுத்தும் கடிதத்தை சபாநாயகரிடம் வெற்றிவேல் அளித்தார்.

 Vetrivel MLA seeking dismissal of Rajendran from ADMK Whip post
  அதிமுக எம்.எல்.ஏ வெற்றிவேல் மதிய உணவு சாப்பிட்டு விட்டு போலாம்...-வீடியோ

  அந்த மனுவில் கொறடா ராஜேந்திரன் கட்சிக்கு எதிராக செயல்படுவதாக கூறியுள்ளார். மேலும் முதல்வர் பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக ஆளுநரை சந்தித்து மனு அளித்தது குறித்து கேள்வி கேட்க கொறடாவிற்கு உரிமை இல்லை என்று வெற்றிவேல் ஏற்கனவே கூறி வந்தார்.

  இந்நலையில் கொறடா ராஜேந்திரன் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதால் அவரை பதவிநீக்கம் செய்யக் கோரி வெற்றிவேல் மனு அளித்துள்ளார்.

  சென்னையில் நாளை நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவிற்கு தடை கேட்டு வெற்றிவேல் எம்எல்ஏ தாக்கல் செய்த மனுவை ஹைகோர்ட் தள்ளுபடி செய்தது. மேலும் கோர்ட்டின் நேரத்தை வீணடித்ததற்காக ரூ. 1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பிற்காக அசராமல் அடுத்தகட்டமாக கொறடா ராஜேந்திரனை நீக்கக் கோரி சபாநாயகரிடம் மனு அளித்துள்ளார் வெற்றிவேல் என்பது குறிப்பிடத்தக்கது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  TTV Dinakaran supporting MLA Vetrivel granted letter to Speaker Dhanabal seeking dismissal of Rajendran from ADMK whip post.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற