லஞ்சம் கேட்ட சார் பதிவாளர் கைது... மதுரையில் பரபரப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை ஒத்தக்கடை பகுதியில் அமைந்துள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் 50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளரை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மதுரை ஒத்தக்கடை பகுதியில் ஒருங்கினைந்த சார் பதிவளார் அலுவலகம் இயங்கி வருகின்றது. அதன் சுற்றுவட்டப்பகுதியின் உள்ள அனைத்து சார் பதிவாளர்கள் அலுவலகமும் இங்குதான் செயற்படுகிறது. எனவே இங்கு எப்பவும் சன நெருக்கடியாக இருக்கும்.

Vigilance police arrested a sub register in madurai !

இதில் சின்ன சொக்கிகுளம் பகுதிக்குட்பட்ட பகுதிக்கு சார்பதிவளாராக பணியாற்றி வருபவர் ராஜ். இவர் தன்னிடம் இடம் பதிவு செய்ய வந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரிடம் ரூபாய் ஐம்பாதாயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அதற்கு கிருஷ்ணமூர்த்தி ரூ35000 மட்டும் தருவதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து கிருஷ்ணமூர்த்தி லஞ்ச அழிப்புத் துறையிடம் புகார் அளித்தார். அவரது புகாரைப் பெற்ற லஞ்ச அழிப்புத் துறை, ராஜை லாவகமாக பிடிக்க திட்டமிட்டது. இதையடுத்து அவரது புகாரின் அடிப்படையில் ரசாயனம் தடவிய நோட்டுக்களை கொடுத்து லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கிருஷ்ணமூர்த்தியை அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் இன்று ஐம்பதாயிரம் என்னிடம் தயாராக உள்ளது ரூ 35000த்தை கொடுத்து விட்டு இந்தப் பணத்தை வாங்கி செல்லும்படி கிருஷ்ணமூர்த்தி ராஜிடம் தெரிவித்தார். அதைவாங்க சார் பதிவாளர் ராஜும் அங்கே வந்திருந்தார். ரசாயனம் தடவிய பணத்தை சார் பதிவாளாரிடம் கிருஷ்ணமூர்த்தி கொடுத்த பொழுது அங்கே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலிசார் வந்து அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Vigilance police arrested a sub register in madurai. They arrested him, who ask 50000 from a common man.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற