ஜிஎஸ்டி மாதிரி வச்சு செய்றியே.. விஜய் ஆண்டனியை நோக்கி எத்தனை 'அண்டா' பாஜகவிலிருந்து பறக்கப் போகுதோ!
ஜிஎஸ்டி மாறி நீயும் என்ன வெச்சு செய்யுறனு தனது அண்ணாதுரை படத்தில் ஒரு பாடலை வைத்துள்ளார் விஜய் ஆண்டனி, பாஜகவினருக்கு இந்தத் தகவல் தெரியுமா?
Recommended Video

சென்னை : இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி இயக்கத்தில் உருவாகியுள்ள அண்ணாதுரை படத்தில் "ஜிஎஸ்டி மாறி நீயும் என்ன வெச்சு செய்யுறனு" ஒரு பாடல் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மனைவி பாதிமா, ராதிகா சரத்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள அண்ணாதுரை திரைப்படத்தின் பாடல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி, டயானா சம்பிகா, மஹிமா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அண்ணாதுரை படத்திற்கான பணிகள் முடிவுற்று நவம்பர் 30 முதல் இந்தத் திரைப்படம் வெளியாகிறது.
இந்நிலையில் நேற்று வெளியிடப்பட்டுள்ள அண்ணாதுரை திரைப்பட பாடலில் விஜய் ஆண்டனி, டயானாவிற்கான டூயட் பாடலின் முதல் வரி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நீங்கள் நினைப்பது சரி தான் அண்மையில் பாஜகவினர் மெர்சல் படத்தில் எந்த வசனத்தை நீக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினார்களோ அதே வார்த்தை தான்.

பாஜக தலைவர்களே அட்டென்ஷன்
பாடலின் முதல் வரியே என்ன தெரியுமா, "ஜிஎஸ்டி மாறி நீயும் என்ன வெச்சு செய்யுற, சொல்லாம் கொல்லாம வந்து என்னென்னமோ பண்ணுற" என்று தான் பாடல் தொடங்குகிறது. ஜிஎஸ்டி என்ற வார்த்தை எங்கே தவறாக பயன்படுத்தப்பட்டாலும் உடனே பொங்கி எழும் பாஜகவினருக்கான அடுத்த "அசைன்மெண்டை" இந்தப் பாடல் கொடுத்துள்ளது.
ஜிஎஸ்டி மாறி வெச்சு செய்யுற
அதுவும் ஜிஎஸ்டி மாதிரி வெச்சு செய்யுறனு கிண்டல் வேற பண்ணியிருக்காங்க இந்தப் பாடலில். இதனால் பாஜகவினர் கோபப்பார்வையோ அல்லது பாடலுக்கான விளம்பரமோ நிச்சயம்.

முரணான படம்
பாடல் மட்டுமல்ல படத்தின் பெயருமே கூட பாஜகவினருக்கு முரணாகத் தான் இருக்கிறது. திராவிடக் கொள்கைளை விதைத்த அண்ணாதுரையின் பெயர் தான் இந்தப் படத்திற்கு. ஆனால் சி.என். அண்ணாதுரைக்கும் இந்தப் படத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதே விஜய் ஆண்டனியே சொல்லி இருக்கிறார். .இது அரசியல் சார்ந்த படமல்ல மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக மட்டுமே அண்ணாதுரை என்ற பெயர் பயன்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

இந்தப் பாட்டுக்கு மியூட் உண்டா?
எது எப்படியாக இருந்தாலும் மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி டயலாக்கை மியூட் செய்யச் சொன்னவர்கள், இந்தப் பாடல் வரிகளுக்கு என்ன சொல்லப்போகிறார்களோ. அதுமட்டுமல்ல வெறும் வசனம் பேசியதற்காகவே மெர்சல் பட நாயகன் விஜயை ஜோசப் விஜய் என்று எச். ராஜா அடையாளம் தந்தார். அவருக்கு லட்டு மாதிரி இந்த விஷயம் கிடைத்திருக்கிறது.

ஸ்டார்ட் பாஜக
ஏனெனில் பாடல் வரியில் ஜிஎஸ்டி, பெயரிலேயே விஜய் ஆண்டனி என்று எல்லாமே பாஜக எதிர்ப்பிற்கு சாதகமாக இருக்கிறது. அப்புறம் என்ன பாஜக தலைவர்களே ஸ்டார்ட் மியூசிக்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications