For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கப்பல் கேப்டன் மாதிரி எங்க கூட்டணில கட்சி கேப்டன் இருக்கிறார் -எஸ்.வி.சேகர் பேச்சு

|

சென்னை: பாஜக சார்பில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள எஸ்.வி.சேகர் பேச்சோடு பேச்சாக "கேப்டன்" விஜயகாந்த் இருப்பதால் பாஜக கூட்டணி கவிழ்வதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறியுள்ளார்.

பாஜகவிற்காக பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகிறார் நடிகர் எஸ்.வி.சேகர். பிராசரத்தின்போது விஜயகாந்த்தையும் புகழ்ந்து பேசி வருகிறார்.

தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் பாஜக தலைவர் இல.கணேசனை ஆதரித்து அவர் மயிலாப்பூர் பகுதியில் வாக்கு சேகரித்தார்.

கப்பல் கேப்டனா? கட்சி கேப்டனா? :

கப்பல் கேப்டனா? கட்சி கேப்டனா? :

அப்போது அவர் பேசியபோது, "ஒரு கப்பலில் கேப்டன் இருந்தால் அது கவிழாது. அது போல எங்கள் அணியிலும் கேப்டன் உள்ளார். இதனால், இந்த பாஜக கூட்டணி எந்த நேரத்திலும் கவிழாது .

காங்கிரஸால் பாஜக வெற்றி பெரும்:

காங்கிரஸால் பாஜக வெற்றி பெரும்:

மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என்று கருதி தான் தேர்தலில் நிற்கவில்லை. காங்கிரஸ் தேர்தலில் நிற்பதால் பாஜகவுக்கு தான் ஓட்டு வங்கி அதிகரிக்கும்.

மோடி ஆவார் பிரதமர்:

மோடி ஆவார் பிரதமர்:

பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி 300 சீட்டுக்கு மேல் பெற்று வெற்றி பெறுவார். 3 முறை தொடர்ந்து அவர் பிரதமராக பதவி வகிப்பார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் சினிமாவில் தான் நடிப்பார்.

விஜயகாந்த்தான் அடுத்த முதல்வர்:

விஜயகாந்த்தான் அடுத்த முதல்வர்:

ஆனால், மக்கள் மத்தியில் மனதில் பட்டதை பேசி விடுபவர் அவர். 2016 இல் தமிழக முதல்வராக வருவேன் என்று விஜயகாந்த் கூறி வருகிறார். அவ்வாறு அவர் வந்தால் பாஜக வரவேற்கும். 100 சதவீத மக்கள் காங்கிரஸ் அரசை அகற்ற வேண்டும் என்பதில் முடிவாக இருக்கிறார்கள்.

கூட்டணி அமைவதெல்லாம் :

கூட்டணி அமைவதெல்லாம் :

கடவுளின் அருளால் கிடைத்துள்ள இந்த மிகப்பெரிய கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும். கேப்டன் கூட இருந்தால் எந்த கப்பலும் கவிழாது. அது போல இங்கும் கேப்டன் உள்ளார். இதனால், இந்த கூட்டணி எந்த நேரத்திலும் கவிழாது" என்று கூறியுள்ளார் அவர்.

English summary
Actor cum ex MLA S.V.Sekar camapaigned for South Chennai BJP candidate Ila Ganesan. He said in his speech that vijayakanth can make the coalition strong.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X