திமுக அரசின் செயல்பாடுகளை சும்மா சொல்லக் கூடாது.. பின்றாங்கப்பா! சபாஷ் போடும் விஜயகாந்த் மகன்!
மயிலாடுதுறை: மழை வெள்ள பாதிப்பு விவகாரத்தில் திமுக அரசின் செயல்பாடுகளை சும்மா சொல்லக் கூடாது என்றும் வரவேற்கத் தக்க வகையில் அரசின் நடவடிக்கைகள் அமைந்திருப்பதாகவும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் திமுக அரசை பாராட்டி விஜயகாந்த் மகன் பேசியிருப்பது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட அவர் இதனைக் கூறினார்.

விஜயகாந்த் மகன்
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அழுகிய நிலையில் இருந்த பயிர்களை விஜய பிரபாகரனிடம் காண்பித்த விவசாயிகள் தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர். அதனை கவனமாக கேட்டுக் கொண்ட விஜய பிரபாகரன், நிச்சயம் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தார்.

அரசுக்கு கோரிக்கை
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜய பிரபாகரன், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ 30,000 வழங்க அரசு முன் வரவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். அதேபோல் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி, தரங்கம்பாடி தாலுக்காகளுக்கு நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது போல், குத்தாலம் தாலுகாவுக்கும் நிவாரண தொகை அறிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

அரசின் நடவடிக்கைகளுக்கு வரவேற்பு
மழை வெள்ளத்தால் பாதித்த மாவட்டங்களில் தமிழக அரசின் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தேமுதிக வரவேற்பு தெரிவிப்பதாகவும் உடனடியாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இதனிடையே தெலுங்கு சினிமாவில் விஜய் படத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏற்புடையதல்ல என்று கூறிய விஜய பிரபாகரன், தமிழகத்தில் அனைத்து மொழி படங்களும் வரவேற்கப்பட்டு வெற்றியடைந்துள்ளதாக கூறினார்.

பக்குவம் வந்தது
தமிழ் திரைப்படங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போக்கால் சினிமா தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர்கள் என கவலைத் தெரிவித்தார். விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனின் அணுகுமுறைகளில் முன்பைக் காட்டிலும் பெரியளவில் மாற்றமும், பக்குவமும் வெளிப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications