விஜயலக்ஷ்மிக்கு பத்மஸ்ரீ விருது.. ஆண்டாளின் கருணையாம்.. சொல்கிறார் எச் ராஜா!
விஜயலக்ஷ்மி நவநீதகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்தது ஆண்டாளின் கருணை என எச் ராஜா தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: விஜயலக்ஷ்மி நவநீதகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்தது ஆண்டாளின் கருணை என எச் ராஜா தெரிவித்துள்ளார்.
2018ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு நேற்று அறிவித்தது. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பாரத ரத்னாவுக்கு அடுத்தபடியாக நாட்டின் உயரிய விருதான பத்ம விருதுகள் கருதப்படுகின்றன. தமிழகத்தில் இருந்து மட்டும் நான்கு பேர் இந்த ஆண்டு பத்ம விருதுகளுக்கு தேர்வாகியுள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்த நால்வர்
அதில் இசைஞானி இளையராஜாவுக்கு பத்மபூஷண் விருதும், மதுரையை சேர்ந்த ராஜகோபால் வாசுதேவனுக்கும், நாட்டுப்புற கலைஞர் விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணனுக்கும், கோவையை சேர்ந்த யோகா பயிற்சியாளர் ஞானம்மாளுக்கும் பத்மஸ்ரீ விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

விஜயலக்ஷ்மிக்கு பத்மஸ்ரீ விருது
தமிழ்நாட்டை சேர்ந்த நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இவர் தமிழில் ஏராளமான நாட்டுப்புற பாடல்கள் பாடியுள்ளார். இசைத்துறையில் சிறந்து விளங்கியதால் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

எச் ராஜா புகழாரம்
இந்நிலையில் விஜயலக்ஷ்மி நவநீதகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்க ஆண்டாளின் கருணையே காரணம் என பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றையும் அவர் பதிவிட்டுள்ளார்.
|
ஆண்டாள் திருவடி சரணம்
அதில் ஆண்டாள் நாச்சியார் அவமானப்படுத்தப்பட்ட செய்தி கேட்டு ஊண் உறக்கம் இன்றி ஆண்டாள் நாச்சியாரைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்த விஜயலக்ஷ்மி நவநீதகிருஷ்ணன் அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது. என்னே தாயின் கருணை. ஆண்டாள் திருவடி சரணம். என எச் ராஜா தெரிவித்துள்ளார்.

கொதித்த விஜயலக்ஷ்மி
ஆண்டாள் குறித்து வைரமுத்து பேசியது சர்சையானபோது நாட்டுப்புற பாடகியான விஜயலக்ஷ்மி நவநீதகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்தார். வைரமுத்து வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்ட போதும் ஏற்றுக்கொள்ளாத விஜயலக்ஷ்மி கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications