ஆலங்குளம் அருகே அடிப்படை வசதி கோரி கிராம மக்கள் திடீர் மறியல்.. ஸ்தம்பித்த போக்குவரத்து!
அடிப்படை வசதி கோரி கிராம மக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
நெல்லை: ஆலங்குளம் அருகே அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.
ஆலங்குளம் தொகுதிக்கு உட்பட்ட கிராமம் கீழகரும்புளியூத்து. இந்த கிராமத்தில் பேருந்து நிறுத்தம், ரேஷன் கடை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் இன்றி பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதாக தெரிகிறது. இதனால் இந்த பிரச்சனையையெல்லாம் தீர்க்க கோரி, பலமுறை கிராம மக்கள் கோரிக்கை விடுத்தும், மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த அக்கிராம மக்கள், தென்காசி - திருநெல்வேலி நெடுஞ்சாலையில் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். பொதுமக்களின் இந்த திடீர் மறியல் காரணமாக 1 மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள், மற்றும் வேலைக்கு செல்வோர் கடும் சிரமத்திற்கு ஆளாயினர்.
தகவலறிந்து வந்த ஆலங்குளம் காவல்துறையினர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை கிராமத்திற்கு அழைத்து வந்து, பிரச்சனைகள் அனைத்திற்கும் விரைவில் தீர்வு காணப்படும் என்று உறுதியளித்ததன் பேரில் கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டனர். ஆனால் போராட்டத்தை கைவிடவில்லை. அதிகாரிகள் வரும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்து சாலையின் ஓரத்தில் அனைவரும் குவிந்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications