For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விசாலாட்சி நெடுஞ்செழியன் மறைவு... தொலைபேசியில் இரங்கல் கூறிய ஜெயலலிதா

முதல்வர் ஜெயலலிதா தொலைபேசி மூலம் தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளதாக மறைந்த விசாலாட்சி நெடுஞ்செழியனின் மகன் கூறியுள்ளார்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக அமைப்புச் செயலாளராக பணியாற்றி வந்த மூத்த தலைவர் விசாலாட்சி நெடுஞ்செழியன் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 93.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் நிதியமைச்சராக இருந்தவர் நாவலர் நெடுஞ்செழியன். இவரது மனைவி விசாலாட்சி நெடுஞ்செழியன். தமிழக அரசின் பொது சுகாதாரத்துறையின் இணை இயக்குநராக இருந்து இருந்து ஓய்வு பெற்றார்.

Visalakshi Nedunchezhian dies Jayalalithaa condolences to family

மகப்பேறியல் மருத்துவராக இருந்த இவர், தமிழக அரசின் பொது சுகாதாரத் துறையின் இணை இயக்குநராகப் பொறுப்பு வகித்தார். 1984ம் ஆண்டு அரசுப் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்.

தனது கணவரான நெடுஞ்செழியனின் மறைவுக்குப் பின்னர், அதிமுகவில் இணைந்து தீவிரமாக கட்சிப் பணியாற்றினார்.

•2002ம் ஆண்டிலிருந்து கட்சியில் தீவிரமாக பணியாற்றி வந்த அவருக்கு அதிமுக அமைப்புச் செயலர் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்தப் பொறுப்பை கடந்த 14 ஆண்டுகளாக அவர் வகித்து வந்தார்.

•தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவியாக, 2013-ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு ஜனவரி வரை அவர் செயல்பட்டுவந்தார்.

•இந்நிலையில், விசாலாட்சி நெடுஞ்செழியனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கடந்த, 15 நாட்களுக்கும் மேலாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சமீபத்தில் வீடு திரும்பினார்.

•திங்கட்கிழமை பிற்பகல் 2 மணிக்கு ஆழ்வார்ப்பேட்டை சீத்தாம்மாள் காலனியில் உள்ள வீட்டில், விசாலாட்சி நெடுஞ்செழியன் உயிர் பிரிந்தது. இதையடுத்து, அவரது உடல் வீட்டில், பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

மலர் வளையம் வைத்து அஞ்சலி

அதிமுக அவைத் தலைவர் இ.மதுசூதனன், கட்சியின் கொள்கைபரப்பு செயலாளரும் மக்களவை துணை சபாநாயகருமான மு.தம்பித்துரை, வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஏ.நவநீதகிருஷ்ணன், மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், அதிமுக செய்தித் தொடர்பு குழு உறுப்பினர்கள் சி.பொன்னையன், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் திங்கட்கிழமையன்று இரவு விசாலாட்சி நெடுஞ்செழியன் உடலுக்கு கட்சியின் சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

ஜெயலலிதா அறிக்கை

விசாலாட்சி நெடுஞ்செழியன் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அதிமுக அமைப்புச் செய லாளர் விசாலாட்சி நெடுஞ்செழியன் உடல் நலக்குறைவால் மரண மடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு பெரும் துயரமடைந்தேன். கட்சியின் மீதும் தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்த அவரது இழப்பு அதிமுகவுக்கு ஈடு செய்ய முடியா தது. விசாலாட்சி நெடுஞ்செழியனை இழந்துவாடும் அவரது குடும் பத்துக்கு இரங்கலையும் அனுதாபத் தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.

தொலைபேசியில் இரங்கல்

இந்நிலையில், விசாலாட்சி நெடுஞ்செழியனின் மகன் மதிவாணன், முதல்வர் ஜெயலலிதா தொலைபேசி மூலம் தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார். என் தாயின் உடல் செவ்வாய்கிழமையன்று மாலை பெசன்ட் நகர் மயானத்தில் அடக்கம் செய்யப்படுகிறது என்று கூறியுள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார். 50 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வருகிறார். முதன்முறையாக தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக தற்போது அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது.

English summary
AIADMK general secretary J Jayalalithaa, in a statement on Monday evening, expressed her condolences to Visalakshi family.Visalakshi was the wife of former state finance minister V R Nedunchezhian, who died in 2000. Nedunchezhiyan was one of the founding members of the DMK, and was very close to former chief minister C N Annadurai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X