நேத்து வந்த விஷால் கூட ஆரம்பிச்சாச்சு... நீங்க எப்ப தலைவா.. ஏங்கும் ரஜினி ரசிகர்கள்!
Recommended Video

சென்னை: நடிகர் விஷாலும் கட்சியை தொடங்கிவிட்ட நிலையில் ரஜினிகாந்த் எப்போது கட்சியை தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
நடிகர் ரஜினியை அரசியல் களத்திற்குள் இழுத்து விட்டு 20 வருடங்கள் ஓடி விட்டன. ரஜினியே நான் வரப் போறேன் என்று அறிவித்து இதோ 8 மாதங்கள் உருண்டோடிவிட்டன. வெற்றிகரமான முதலாமாண்டு விழாவும் வேகமாக நெருங்கி வருகிறது. கடந்த ஜனவரி 1-ஆம் தேதி ரஜினி மக்கள் மன்றம் என்ற அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்புக்கு உறுப்பினர்களை சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அமைப்பில் சேர ஏகப்பட்ட ரூல்ஸ்கள். அந்த அமைப்புக்காக வட்டம், மாவட்டம் என நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டு விட்டனர். ஆனால் அவர் இன்னும் கட்சி தொடங்கவில்லை. எப்போது என்றும் தெரியவில்லை.

உரிதான சிரிப்பு
தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை, வெற்றிடம் உள்ளதாக கூறிய ரஜினிகாந்த் இதுவரை கட்சியின் பெயரை அறிவிக்கவில்லை. இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பும் போதெல்லாம் இன்னும் நேரம் வரவில்லை என்று கூறி விட்டு அவருக்கே உரிதான சிரிப்பை சிரித்து விட்டு சென்றுவிடுவார். இப்போது வெற்றிடமும் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. ஸ்டாலின் வந்து விட்டார், கமல் வந்து விட்டார்,, இதோ இப்போது விஷாலும் வந்து விட்டார். திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய தொகுதி இடைத்தேர்தலில் ஆழம் பார்க்க ரஜினி போட்டியிட வேண்டும் என்பது ரசிகர்கள் அதாவது அவரது "காவலர்"களின் கோரிக்கையாகும். ஆனால் ரஜினியிடம் இருந்து இன்னும் எந்த சிக்னலையும் காணோம்.

பணிகளை செய்வேன்
இந்நிலையில் நடிகர் விஷால் மக்கள் நல இயக்கத்தை இன்று தொடங்கியுள்ளார். ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போலி ஆவணத்தை சமர்ப்பித்ததாக அவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. எம்எல்ஏ ஆனால்தான் மக்கள் நல பணிகளை செய்ய முடியுமா, நான் அரசியலில் இல்லாமலேயே மக்கள் பணிகளை செய்வேன் என்ற விஷால் சொன்னதோடு சரி, அந்த பக்கம் தலைவைத்து கூட படுக்கவில்லை.

ரஜினி பக்கம்
நடிகர் சங்கத்திலும் மக்கள் மத்தியிலும் விஷாலுக்கு அந்தளவுக்கு நல்ல பெயர் இல்லை என்றாலும் கூட அவர் ஒரு இயக்கத்தைத் தொடங்கிவிட்டார். இதனால் விஷாலைப் பார்க்கும் மக்கள் அடுத்து ரஜினி பக்கம் திரும்பிப் பார்க்கிறார்கள்.

தீவிர அரசியல்வாதி
தற்போது ரஜினி சினிமாவில்தான் பிசியாக உள்ளார். மக்கள் பிரச்சினைகளில் குழப்பமான கருத்து தெரிவித்து கெட்ட பெயரை சம்பாதித்து விட்டு போய் விடுகிறார். எப்போது கட்சி ஆரம்பிப்பார். எப்போது தீவிர அரசியல்வாதியாக மாறுவார். என்ன செய்யப் போகிறார். ஏது செய்யப் போகிறார்.. என்னதான் செய்வார் என்றெல்லாம் ஏகப்பட்ட கேள்விகள்..
டிசம்பர் மாதம் கூட்டத்தில் பேசிய ரஜினி, கட்சி, கொடி எல்லாம் ரெடி இனி அம்புவிடுவதுதான் பாக்கி என்றார்... ஆனால் அம்புதான் எப்பப் பாயும் என்று தெரியவில்லை!
ஒரிஜினல் "பாயும்புலி" அமைதியாக இருக்கிறது.. ஆனால் பாயும் புலி என்ற பெயரில் நடித்த விஷால் கிளம்பி விட்டார்!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications