ஓஎன்ஜிசிக்கு தொடரும் எதிர்ப்பு- கதிராமங்கலத்தில் 14வது நாளாக நீடிக்கும் காத்திருப்பு போராட்டம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கும்பகோணம்: ஓஎன்ஜிசி நிறுவனத்தை வெளியேற்ற வலியுறுத்தியும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளோரை விடுவிக்க வலியுறுத்தியும் கதிராமங்கலம் கிராம மக்கள் 14வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் பராமரிப்பு பணியின் போது ஏற்பட்ட கசிவால் அப்பகுதியில் குடிநீரும் விளை நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளது.

Waiting protest continues today as 14th day in the Kathiramangalam village

இதனால் பாதிக்கப்பட்டுள்ள கிராம மக்கள் ஓஎன்ஜிசி நிறுவனத்தினர் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தியும், சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யக்கோரியும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Onemore ONGC Pipe leaks at Kathiramangalam Village-Oneindia Tamil

13வது நாளான நேற்று போராட்டக் குழு தலைவரான ஜெயராமனின் தந்தை தங்கவேல் மறைவையொட்டி கதிராமங்கலத்தில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று 14வது நாளாக போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Waiting protest continues today as 14th day in the Kathiramangalam village. Kathiramangalam villagers demanding ONGC should leave the village and arrested persons should be released.
Please Wait while comments are loading...