அடையாற்றின் கரையோர வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.. மக்கள் அவதி #ChennaiRains
சைதாப்பேட்டையில் ஆற்றின் கரையோர வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.
சென்னை: சைதாப்பேட்டையில் ஆற்றின் கரையோர வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. நாளுக்கு நாள் வலுப்பெற்று வரும் வடகிழக்குப் பருவமழை கடலோர மாவட்டங்களை வெளுத்து வாங்கி வருகிறது.

கடலூர், நாகை, திருவள்ளூர் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் திருவள்ளூரில் பெய்து வரும் மழையால் சென்னை அடையாற்றில் நீர்வரத்து உயர்ந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் சைதாப்பேட்டையில் ஆற்றின் கரையோர வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. அப்பகுதியில் வசித்த மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்களை தங்கவைக்க சமுதாய நலக்கூடங்கள் தயார் நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை புறநகர் பகுதிகளும் தண்ணீரில் தத்தளித்து வருகின்றன.
தொடர் மழை மற்றும் தாழ்வான பகுதிகளில் சூழ்ந்துள்ள வெள்ளத்தால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே அஞ்சுகின்றனர். இதனிடையே மேலும் 2 நாட்களுக்கு தமிழகத்தில் பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications