மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு- 100 அடியை எட்டும் நீர்மட்டம்- மகிழ்ச்சியில் விவசாயிகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சேலம்: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.

120 அடி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 97 அடியாக உள்ளது. நீரின் அளவு அதிகரித்துள்ளதால் விரைவில் 100 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 19,225 கனஅடியிலிருந்து 31,236 கன அடியாக அதிகரித்துள்ளது. சம்பா சாகுபடிக்காக அணையிலிருந்து நொடிக்கு 18,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Water level at Mettur dam likely to touch 100 feet

கடந்த இரண்டு மாதமாக தென்மேற்கு பருவ மழை காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வருகிறது. கர்நாடகாவிலுள்ள கபினி அணை நிறைந்துவிட்டது. கிருஷ்ணராஜ சாகர் அணை நிரம்பி வருகிறது.

கடந்த சில நாட்களாக மழையின் தாக்கம் அதிகமாக உள்ளது. கடந்த மாதம் 29ஆம் தேதி காவிரி ஆற்றில் அதிகபட்சமாக 48,221 கன அடி நீர் வரத்து இருந்தது. பிறகு, படிப்படியாக நீர்வரத்து குறைந்தது.

கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வரும் நிலையில், மீண்டும் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 19,225 கனஅடியிலிருந்து 31,236 கன அடியாக அதிகரித்துள்ளது.

சம்பா சாகுபடிக்காக அணையிலிருந்து நொடிக்கு 18,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் தற்போதைய நீர்மட்டம் 97.30 அடியாக உள்ளது. 61.39 டி.எம்.சி நீர் இருப்பு உள்ளது.

இதேபோல மழை நீடித்து, அணைக்கு நீர் வரத்து அதிகரித்தால் விரைவில் அணையின் நீர்மட்டம் நாளைய தினம் 100 அடியை எட்ட வாய்ப்புள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த காலங்களில் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களிலேயே 100 அடியை எட்டிவிடும். இந்த ஆண்டு பருவமழை தாமதமாக பெய்யத் தொடங்கியதால் அக்டோபர் மாதம்தான் 100 அடியை எட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The water level in the Mettur Dam likely to touch the 100-foot mark .

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற