காரைக்குடி பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரம் வழங்கும் விழா
சிவகங்கை மாவட்ட பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரம் வழங்கும் விழா நடைபெற்றது.
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் கடந்த 29-ஆம் தேதி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சார்பில் குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரம் வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ். சுப்பையா தலைமை வகித்தார். தேவகோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் மாரிமுத்து முன்னிலை வகித்தார்.

தலைமையாசிரியர் பீட்டர் ராஜா வரவேற்றார். விழாவில் அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் சுப்பையா பள்ளிக்கு தேவையான இருக்கை வசதி, மாணவர்கள் தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்குவதற்கு ஏதுவாக கணிப்பொறிகள், மாணவர்கள் பாடங்களை ஆர்வத்துடனும், எளிதில் புரியும் வண்ணம் படிப்பதற்கு ஏதுவாக பிரொஜக்டர்கள் போன்ற வசதிகளை செய்து தருவதாக உறுதியளித்தார்.

இவ்விழாவில் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சகாய அமலன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர்அழகு சுந்தரி, பள்ளி வளர்ச்சி மற்றும் மேலாண்மைக் குழுத் தலைவர் சகாய செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். பட்டதாரி ஆசிரியர்கோமதிஜெயம் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி தலைமையாசிரியர் முத்துவேல்ராஜன் மற்றும் பட்டதாரி ஆசிரியர் சரவணன் ஆகியோர் செய்திருந்தார்கள். இந்நிகழ்ச்சியை உதவி தலைமையாசிரியை விஜயலெட்சுமி தொகுத்து வழங்கினார்கள்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications