இனி எக்காலத்திலும் தினகரன் குடும்பத்தை சேர்க்கவே மாட்டோம்.. ஜெயக்குமார் பொளேர் அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவின் அடிமட்ட தொண்டர்களின் கருத்துக்கு மதிப்பு அளித்து சசிகலா, டிடிவி தினகரன் குடும்பத்தினரை ஒதுக்கி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உடனான ஆலோசனைக்குப் பிறகு இதனை அவர் அறிவித்தார்.

ஒரு குடும்பம் கட்சியிலும் ஆட்சியிலும் ஆதிக்கம் செலுத்துவதை நிறுத்த வேண்டும் என்று கூறிய அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக தொண்டர்களின் விருப்பத்தையும், தமிழக மக்களின் ஒட்டு மொத்த விருப்பத்தையும் நிறைவேற்ற இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

We will not accept Sasikala family ruling us anymore says Jayakumar

வெளிப்படையாக தெரிவிக்க வேண்டுமென்றால் டி.டி.வி. தினகரன் குடும்பத்தைச் ஒதுக்கி வைக்க வேண்டும் என்ற விருப்பம் நிறைவேற்றப்பட்டு உள்ளது என்றார்.
இது சட்டமன்ற , நாடாளுமன்ற, அதிமுக நிர்வாகிகளின் ஒட்டு மொத்த விருப்பம் என்றார்.

டிடிவி தினகரனின் குடும்பத்தினர் எந்த ஒரு தலையீடும் இல்லாமல் இருக்கும். இந்த முடிவை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் இன்று அறிவிக்கிறோம். அனைத்து அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் இணைந்து முடிவு எடுத்துள்ளோம் என்று ஜெயக்குமார் கூறினார்.

கட்சி வழிநடத்துவதற்கான குழு விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்த அவர், ஒரு குடும்பம் கட்சியிலும் ஆட்சியிலும் ஆதிக்கம் செலுத்துவதை நிறுத்த வேண்டும் என்றார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
We will not accept this family ruling us anymore. We will move forward without them," said finance minister Jayakumar. The annoucment was made after a meeting of minister at chief minister's residence on Tuesday.
Please Wait while comments are loading...