மத்திய அரசுக்கு ஏற்றார்போல் கல்வித்தரத்தை உயர்த்துவோம்... சொல்கிறார் செங்க்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஈரோடு: மத்திய அரசு கொண்டு வரும் அனைத்துத் தேர்வுகளையும் எதிர்கொள்ளும் வகையில் கல்வித் தரத்தை உயர்த்துவோம் என பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையின் கூறியுள்ளார்.

கோபியில் குளம் தூர்வாரும் பணியை பார்வையிட அமைச்சர் செங்கோட்டையின் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், மத்திய அரசு கொண்டு வரும்ஜ் அனைத்து தேர்வுகளையும் எதிர்கொள்ளும் வகையில் கல்வித் தரத்தை உயர்த்துவோம் என கூறியுள்ளார்.

 We will upgrade our education to meet out central government standard

மேலும் மத்திய அரசு கொண்டு வந்த நீட், மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வில் மாணவர்கள் வெற்றி பெற 54,000 புத்தகங்கள், தமிழகம் முழுவதும் மாணவர்களுக்கு வழங்க உள்ளதாகக் கூறினார். இந்த கல்வியாண்டில் இந்தியா முழ்வதும் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதிய மாணவர்களில் தமிழக மாணவர்கள் பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பொறியியல் படிப்புக்கும் தேசிய அளவில் ஒரே பொதுத்தேர்வு கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மரைந்த முதல்வர் ஜெயலலிதா நீட் தேர்வை எழுத தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என கோரிவந்தார்.

இந்த நிலையில்தான், தற்போதைய தமிழக அரசானது, மத்திய அரசு கொண்டுவரும் அனைத்துத் தேர்வுகளையும் எதிர்கொள்ள கல்வித்தரம் மாற்றியமைக்கப்படும் என கூறியுள்ளார். இது கல்வியாளர்களிடையே பெரும் சர்ச்சையை எழுப்பி வருகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Minister Sengottaiyan told that Tamilnadu government will upgrade the quality of education to meet out central government exams.
Please Wait while comments are loading...