அப்போ விளம்பரம் தந்தாங்களே! எப்ஐஆரை மாத்தணும்! கள்ளக்குறிச்சி பள்ளி மீது ஆணையம் புகார்.. 3 கேள்விகள்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பள்ளியில் இன்று ஆய்வு நடத்திய மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி சில முக்கியமான குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக மூன்று கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக டிஐஜி பிரவீன் குமார் தலைமையில் எஸ்ஐடி விசாரணை நடைபெற்று வருகிறது.
மாணவி மரணம் தொடர்பாக இன்னொரு பக்கம் சிபிசிஐடி விசாரணை நடக்கிறது. மைனர் மரணம் என்பதால் மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆணையம் தனி விசாரணை நடத்தி வருகிறது.

ஆணையம் விசாரணை
இந்த நிலையில் இன்று கள்ளக்குறிச்சி பள்ளியில் ஆய்வு செய்த மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி பள்ளி மீது சில புகார்களை அடுக்கினார். இந்த புகார்களில் முக்கியமானது என்றால், அது பள்ளியின் ஹாஸ்டலுக்கு அனுமதி இல்லை.. அனுமதி இல்லாமல்தான் மாணவர்கள் அங்கு தங்கி படித்தனர் என்பதுதான். அதாவது ஹாஸ்டல் அனுமதி பெறாமல் நடத்தப்பட்டதாக அவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.

கேள்வி 1
இந்த நிலையில்தான் சரஸ்வதி வைத்த புகார் காரணமாக 3 விதமான கேள்விகள் எழுந்துள்ளன. முதல் கேள்வி, 3 மாதம் முன் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக ஸ்ரீதர் பள்ளிகள் தொடர்பாக விளம்பரம் ஒன்றை கொடுத்தார். அதில் தனியார் பள்ளிகள் அனைத்தும் தங்களின் விடுதிகளை ரிஜிஸ்டர் செய்ய வேண்டும். ஹாஸ்டல் ஆக்ட்டில் சட்டப்படி ரிஜிஸ்டர் செய்ய வேண்டும். உடனே இது தொடர்பாக ரிஜிஸ்டர் செய்ய வேண்டும் என்று அவர் விளம்பரம் கொடுத்து இருந்தார்.

கேள்வி 2
ஆனால் அப்போது இந்த பள்ளி அதற்கு விண்ணப்பம் செய்யவில்லை. ரிஜிஸ்டர் செய்வதற்கு முயற்சி எடுக்கவில்லை. ரிஜிஸ்டர் செய்யாமல் ஹாஸ்டல் நடத்திய பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? கேள்வி 2 - பொதுவாக வழக்கில் விசாரணை நடக்கும் போது புதிய விஷயங்கள் கண்டறியப்பட்டால் அதன் அடிப்படையில் புதிய எப்ஐஆர் பதிவு மாற்றம் செய்யப்படும். எனவே இதை காரணமாக வைத்து எப்ஐஆர் மாற்றப்படுமா?

கேள்வி 3
ஹாஸ்டல் அனுமதி இன்றி செயல்படுத்தப்பட்டதாக கூறி பள்ளி நிர்வாகம் மீது போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. கேள்வி 3 - பொதுவாக பெண்கள், குழந்தைகள் பள்ளிகளில் ஹாஸ்டலர் ரிஜிஸ்டர் செய்யப்படவில்லை என்றால் 2-3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும். தமிழ்நாட்டில் இன்னும் எத்தனை ஹாஸ்டல்கள் இப்படி அனுமதி இன்றி இயங்கி வருகின்றன? அதன்மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?












Click it and Unblock the Notifications