1975ஆம் ஆண்டு வரை தியேட்டர்களில் இசைக்கப்பட்ட தேசிய கீதம் நிறுத்தப்பட்டது ஏன்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் திரைப்படம் தொடங்குவதற்கு முன்பு தேசியக்கீதம் இசைக்கப்படுவது இது முதல் முறையல்ல. 1975ஆம் ஆண்டு வரை திரையரங்குகளில் தேசியக் கீதம் இசைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள தியேட்டர்களில் திரைப்படம் தொடங்குவதற்கு முன்பு தேசிய கீதம் கட்டாயமாக இசைக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அப்போது திரையில் தேசியக்கொடி காட்டப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திரையரங்குகளில் தேசியக்கீதம் இசை கப்படுவது இது முதல் முறையல்ல. 1975ஆம் ஆண்டு வரை திரையரங்குகளில் தேசியக்கீதம் இசைப்பட்டது.

எப்போது வரை இசைக்கப்பட்டது தேசிய கீதம்

எப்போது வரை இசைக்கப்பட்டது தேசிய கீதம்

1975ஆம் ஆண்டு வரை திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படுவது வழக்கமாக இருந்தது. ஆனால் திரைப்படம் தொடங்குவதற்கு முன்னால் அல்ல. திரைப்படம் முடிந்த பிறகு இசைக்கப்பட்டது.

தேசிய கீதத்தை அவமதித்த மக்கள்

தேசிய கீதத்தை அவமதித்த மக்கள்

படம் முடிந்த பிறகு திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. ஆனால் மக்கள் அதனை மதிக்காமல் தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்காமல், அதில் கவனம் செலுத்தாமல் இருந்தனர்.

திரையரங்குகளில் தேசியக்கீதத்துக்கு தடை

திரையரங்குகளில் தேசியக்கீதத்துக்கு தடை

மக்களின் அவமதிப்பால் திரையரங்குகளில் தேசிய கீதம் தடை செய்யப்பட்டது. தேசிய கீதத்தை இசைத்து அதனை அவமதிப்பதை விட இசைக்காமல் இருப்பது நல்லது என முடிவு செய்யப்பட்டது.

தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

திரையரங்குகளில் தேசிய கீதத்தை இசைப்பது தொடர்பான மனுவை 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அப்போது திரையரங்குகளில் தேசிய கீதத்தை இசைப்பது குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் படத்தை காட்சிப்படுத்துவற்கு முன்பு மக்கள் எழுந்து நிற்பது இடையூறை ஏற்படுத்தும் தெரிவித்தது. மேலும் இதனால் தேசிய கீதத்துக்கு அவமதிப்பதான் ஏற்படும் என்றும் கூறி சென்னை உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
National anthem have been played in theaters till 1975. But it was stopped in theaters when people was not giving proper respect to that.
Please Wait while comments are loading...