ரஜினியுடன் கமல் அரசியலில் கைகோர்ப்பாரா?.. நோ சான்ஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினி அரசியலில் இறங்க முடிவு செய்து அறிவித்த நாள் முதல் தமிழக தொலைக்காட்சிகள் அவரை வைத்தே கல்லா கட்டி வந்தார்கள். எல்லாமும் ரஜினி எதிர்ப்பு காட்சிகள்தான். திட்டமிட்டே அரங்கேற்றி டிஆர்பி ஐ ஏற்றினார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் வந்த நாள் முதல், பிக்பாஸும் கமலும்தான் ஊடகங்களின் பிரதான இடத்தை பிடித்துள்ளனர்.

 What will happen if Kamal too take the plunge in Politics

ஜெ மறைவுக்குப் பின்னாலும் ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்புக்கு முன்னாலும், கமல் அரசியல் கருத்துகளை ஆவேசமாகக் கூறி வந்தார். ரஜினியின் அறிவிப்பிற்கு பிறகு அடக்கி வாசித்தவர், பிக் பாஸ் ஆரம்பித்த பிறகு மீண்டும் கருத்துகள் கூற ஆரம்பித்துள்ளார்.

ஊழலில் பிஹாருக்கு அடுத்த இடத்தில் தமிழகம் உள்ளது என்றெல்லாம் கூறினார். அந்த ஸ்க்ரிப்ட் எழுதிக் கொடுத்தவருக்கு தேசிய அரசியல் அறிவு இல்லை போலும். பிஹாரில் நிதிஷ் குமார் முதல்வராக பதவியேற்று முதல் ஐந்தாண்டுகளில் ஊழலை பெருமளவில் கட்டுப்படுத்தி, மாநிலத்தை மிக வேகமாக வளர்ச்சிப்பாதையில் கொண்டு சென்றுள்ளார்.

அவருடைய செயல்பாட்டிற்கு பரிசாக மக்கள் அவரையே மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுத்து இரண்டாவது தடவையும் ஆட்சியில் எந்த ஊழல் குற்றச்சாட்டுக்கும் இடம் அளிக்காமல் நடத்திச் செல்கிறார்.

கூவாத்தூர் குதிரைப் பேரத்தில் ஆட்சி நடக்கும் தமிழகம் ஊழலில் தனி சரித்திரம் படைத்திருப்பது தெரியாமல் அரசியல் கருத்துக்கள் கூறி வருகிறார் கமல் ஹாசன்.

இதெல்லாம் அவருடைய சொந்த குரலா அல்லது யாருக்காவது கடன் பட்டிருக்கிறாரா என்பது மர்மமாகவே இருக்கிறது.

கடந்த சில நாட்களாக கமல் பற்றிய பரபரப்புக்கு பஞ்சமில்லை. அரசியலில் அவரும் குதிக்கப் போகிறார் என்று ஆரூடங்கள் சொல்லப்படுகின்றன.

ரஜினியும் கமலும் இணைந்து அரசியல் செய்வார்கள் என்றெல்லாம் விவரம் தெரியாதவர்கள் பேசுகிறார்கள். மீண்டும் ரஜினியுடன் இணைந்து அவருக்கு அடுத்த நிலையில் அரசியலிலும் தொடர்வார் என்பதெல்லாம் வெறும் கற்பனையில் மட்டுமே சாத்தியம்.

I was the first to say that the system is not right, said actor kamalhasan-Oneindia Tamil

பார்க்கலாம்..!

- 'ரைட்' பாண்டியன்

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
An article on Kamal Hassan's political entry.
Please Wait while comments are loading...