Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குலுங்கி குலுங்கி.. அழுத பெண்.. ஸ்பாட்டுக்கு வந்த ஆபீசர்ஸ்.. திருதிருன்னு விழித்த அஞ்சலை.. சேலத்தில்

Subscribe to Oneindia Tamil

சேலம்: மண்ணில் புரண்ட புரண்டு அழுத சிறுமியின் வீடியோ ஒன்று, சேலம் மாவட்ட கலெக்டர் ஆபீஸ் வரை பறந்துள்ளது.. என்ன நடந்தது? யார் அந்த சிறுமி?
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ளது தும்பிப்பாடி.. முள்ளிசெட்டிப்பட்டி அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் விமல்.. 30 வயதாகிறது.. இவர் ஒரு கட்டிட வேலை செய்யும் கூலி தொழிலாளி. மனைவி பெயர் அஞ்சலை. 28 வயதாகிறது.

இவர்களுக்கு 10 வயது மற்றும் 2 வயதில் 2 குழந்தைகள் இருக்கிறார்கள்.. 2 மாதங்களுக்கு முன்பு விமலுக்கு காலில் அடிபட்டுவிட்டது.. அதனால், கட்டிட வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

Where are they going to send the girl to study and why did 10 year old girl refuse to go with her mother

சிறுமி கதறல்: இதனால் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, மனைவி அஞ்சலை, கரும்பாலையில் வேலைக்கு சென்று வருகிறார்.. இப்படிப்பட்ட சூழலில், இவர்களது மூத்த மகள் திடீரென தன்னுடைய பாட்டி வீட்டுக்கு அழுதபடியே வந்தார்.. அப்பாவும், அம்மாவும் தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாகவும், அதனாலேயே வீட்டை விட்டே வெளியேறி வந்துவிட்டதாகவும் பாட்டியிடம் சொல்லி கதறினாள்.. பொட்டியபுரம் கிராமத்தில் இந்த பாட்டி வீடு உள்ளது.. சிறுமியின் கதறலை கேட்டு, அந்த பகுதி மக்கள் ஒன்றுதிரண்டு வந்துவிட்டனர்.. என்ன நடந்தது என்றும் விசாரித்தனர்..

அடிக்கிறாங்க: விஷயத்தை கேள்விப்பட்டதும், சிறுமியை சமாதானப்படுத்த அந்த ஊர் மக்கள் முயன்றனர்.. ஆனால், சிறுமியோ, "ஐயோ.. என்னை என் வீட்டுக்கு அனுப்பிடாதீங்க.. என் அப்பா குடிச்சிட்டு வந்து, என் கை, கால்களை கட்டிபோட்டு அடிக்கிறார். என்னை ஸ்கூலுக்கும் அப்பா அனுப்புவதில்லை.. வீட்டு வேலை செய் என்று என்னுடைய அம்மாவும் என்னை போட்டு அடிக்கிறாங்க.. 2 பேருமே என்னை மாறி மாறி சித்ரவதை செய்றாங்க.. என்னை வீட்டுக்கு அனுப்பிடாதீங்க" என்று கூறி புரண்டு புரண்டு அழுதாள்.
இதையடுத்து, அப்பகுதி மக்கள் சிறுமியின் குடும்பத்துக்கு தகவல் தெரிவித்தனர்.. கொஞ்ச நேரத்தில் சிறுமியின் அம்மா அஞ்சலையும் அங்கே வந்துவிட்டார்.. அவருடன் சிறுமியை அனுப்பி வைத்தனர்.. அப்போது சிறுமி, தன்னுடைய அம்மாவை கட்டிப் பிடித்துக்கொண்டு "அம்மா.. நான் வீட்டுக்கு வரமாட்டேன்" என்று கதறி கதறி அழுதார்.. எனினும் மகளின் கைகளை பிடித்து வீட்டுக்கு அழைத்து செல்ல முயன்றார் அஞ்சலை.. அப்போதும் முரண்டுபிடித்த அந்த சிறுமி, நடுரோட்டிலேயே உட்கார்ந்து கொண்டு அழுது புரண்டாள்...

அஞ்சலை அஞ்சலை: "இனிமேல் உன்னை அடிக்கமாட்டேன்" என்று மகளிடம், அஞ்சலை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து சென்றார்... இதையெல்லாம் அங்கிருந்த நபர்கள் வீடியோ எடுத்து, இணையத்திலும் பதிவிட்டு விட்டனர்.. இந்த வீடியோவை பார்த்து பலரும் அதிர்ந்து போனார்கள்..

உடனடியாக, சேலம் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செல்வன், ஓமலூர் டிஎஸ்பி சங்கீதா, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், சமூக நலத்துறை அதிகாரிகள் என அத்தனைபேரும் முள்ளி செட்டிப்பட்டி கிராமத்திற்கு நேரிலேயே சென்றுவிட்டார்கள்.. அஞ்சலை குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தினார்கள்..

Where are they going to send the girl to study and why did 10 year old girl refuse to go with her mother

படுத்த படுக்கை: விமல் நடக்க முடியாமல் படுத்த படுக்கையில் இருந்தார்... "மகளை அடித்தீர்களா" என்று அதிகாரிகள் கேட்டதற்கு, "என்னால் தட்டுத்தடுமாறி சுவற்றை பிடித்து எழுந்து நிற்க மட்டுமே முடியும்.. ஆனால், தனியாக நடக்க முடியாது,.. நான் எப்படி என் மகளை அடிப்பேன்.. மகளை அடிக்கவில்லை.. அவள் இப்போது 5-ம் கிளாஸ் படித்து வருகிறாள்.. இப்போது ஸ்கூல் லீவு என்பதால், வீட்டிலுள்ள சின்ன சின்ன வேலைகளை செய்து வந்தாள்.. அவள் எப்பவுமே இப்படித்தான்.. ஏதாவது அடிக்கடி சொல்லி கொண்டே இருப்பாள்.. அப்பறம் தானாகவே மறுபடியும் திரும்பி வீட்டிற்கு வந்துடுவாள்" " என்று அதிகாரிகளிடம் சொன்னார்..

இதையடுத்து, அதிகாரிகள் சிறுமியிடம் பேசினார்கள்.. என்ன நடந்தது என்று கேட்டார்கள்.. அதற்கு சிறுமி, "என்னை அப்பா, அம்மா 2 பேருமே அடிப்பாங்க.. வீட்டு வேலை செய்வேன்.. என்னுடைய அம்மாவுக்கு சாப்பாடு கொண்டு போவேன்" என்றாள்.. பிறகு அதிகாரிகள், "ஹாஸ்டலில் தங்கி படிக்கிறாயா? என்று கேட்டதற்கு சிறுமியும் ஒப்புக் கொண்டாள்..

தொடக்கூடாது: இதையடுத்து பெற்றோரிடம், "இனிமேல் சிறுமியை அடிக்கக்கூடாது, துன்புறுத்த கூடாது, சித்ரவதை செய்வதாக இனிமேல் புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரித்தனர்.. பிறகு, காலில் ஊனமுற்ற விமலுக்கு, அரசு உதவி கிடைக்க சேலம் மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுக்குமாறு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சொன்னார்.. அத்துடன், சேலம் வந்து செல்ல 500 ரூபாயும் தந்து உதவினார்.. இப்போது, சிறுமியை ஓமலூர் நகரில் விடுதியுடன் கூடிய பள்ளியில் 6-ம் வகுப்பு சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் அதிகாரிகள்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+