For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மக்கள் நீதி மய்யம்.. யார் அந்த ஸ்தாபகத் தலைவர்?

கமலின் மக்கள் நீதி மய்யம் சார்பில் ஜெயேந்திரர் மறைவுக்கு வெளியிட்ட இரங்கல் செய்தி லெட்டர் பேடில் ஸ்தாபகத் தலைவர் என்ற இடத்தில் யாருடைய பெயரும் இல்லை. கையெழுத்தும் இல்லை.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    இரங்கல் எல்லாம் சரி...யார் அந்த ஸ்தாபகத் தலைவர்?- வீடியோ

    சென்னை: ஜெயேந்திரர் மறைவுக்கு கமலின் மக்கள் நீதி மய்யம் சார்பில் லெட்டர் பேடில் வெளியிடப்பட்ட இரங்கல் செய்தியில் ஸ்தாபகத் தலைவர் என்று மொட்டையாக உள்ளதால் அது குறித்து புது கேள்வி எழுந்துள்ளது.

    பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கிடையே கமல்ஹாசன் கடந்த வாரம் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். அன்றைய தினமே அதன் நிர்வாகிகள் பட்டியலையும் வெளியிட்டார்.

    இந்த கட்சிக்கு கமல்தான் பொதுச் செயலாளர் என்று கூறப்பட்டது. மேலும் தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் ஒருவரே முதல்வராக இருக்க மாட்டார்கள் என்றும் மாறி மாறி ஒருவர் பின் ஒருவராக முதல்வராக இருப்பர் என்றும் தெரிவித்திருந்தார்.

    அனைத்து கட்சி கூட்டம்

    அனைத்து கட்சி கூட்டம்

    இவர் கட்சி தொடங்கிய அடுத்த நாளே காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டது. ஆனால் அதில் கமலுக்கு அழைப்பில்லை. இதுகுறித்து ரசிகர்கள் பல்வேறு கருத்துகளை வெளியிட்ட வண்ணம் இருந்தனர்.

    இடது சாரி , வலது சாரி

    இடது சாரி , வலது சாரி

    கட்சியின் பெயரை வெளியிட்டு அதை கமல் விளக்கும் போது தான் இடதுசாரியும் இல்லாமல் வலது சாரியும் இல்லாமல் இரண்டுக்கும் மய்யமாக இருந்து செயல்படுவேன் என்பதற்காகவே மய்யம் என்ற வார்த்தை சேர்க்கப்பட்டது என்றார். மேலும் அவரது கட்சியின் கொடி மும்பை தமிழ் அமைப்பிடம் இருந்து சுட்டது என்றெல்லாம் சமூகவலைதளங்களில் பரவலாக பேச்சு இருந்தது.

    ஸ்தாபகத் தலைவர்

    ஸ்தாபகத் தலைவர்

    மூச்சு திணறலால் உயிரிழந்த ஜெயேந்திரருக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் இரங்கல் செய்தி அனுப்பப்பட்டது. அந்த லெட்டர் பேடில் ஸ்தாபகத் தலைவர், மக்கள் நீதி மய்யம் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் புது கேள்வி எழுந்துள்ளது.

    கையெழுத்தில்லாத செய்தி

    கையெழுத்தில்லாத செய்தி

    அந்த லெட்டர் பேடில் ஸ்தாபகத் தலைவர் யாரென்ற விவரங்கள் இல்லை. ஒரு கமலாக இருப்பாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படியே அவராக இருந்தால் அவரது பெயரையும் கையெழுத்தையும் இட்டு அறிக்கையை அனுப்புவதில் என்ன பிரச்சினை இருக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபோல் பெயர், கையெழுத்து இல்லாமல் இருக்கும் லெட்டர் பேடுகளால் அதில் உள்ள செய்தியின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாவதோடு, தவறாக பயன்படுத்துவதற்கும் வழி வகுக்கும் என்பதை கமல் அறியாதவரா என்ன?

    English summary
    Makkal Needhi Maiam party releases the condolence letter for demise of Jayendrar. But in the letter pad there is no sign of the founder or name of the founder.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X