"பறை தான் என் உயிர்மூச்சு" பத்மஸ்ரீ விருது பெறும் மதுரைக்காரர்.. யார் இந்த வேலு ஆசான்?
மத்திய அரசு தரப்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் வீரர் அஸ்வின் உள்ளிட்ட பலருக்கும் அறிவிக்கப்பட்டாலும், பறை இசைக் கலைஞரான மதுரை வேலு ஆசானுக்கு அறிவிக்கப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் மனிதனின் ஆதி இசை வடிவமான பறையிசையை எப்போதும் கொண்டாடி வளர்ப்பதில் முன்னோடியாக திகழ்ந்து வருபவர் தான் வேலு ஆசான்.
அலங்காநல்லூரைச் சேர்ந்த இவர் சமர் இசைக் குழுவை நடத்தி வருகிறார். சமர் என்றால் போர் புரிதல் என்று பொருள். போர்க் கருவியான பறையை மனிதன் தொடர்ந்து பயன்படுத்தி வருவதன் பொருளாக, சமர் இசைக் குழு என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 45 ஆண்டுகளாக பறை இசைக் கலைஞராக பயணித்து வருபவர் வேலு ஆசான். பள்ளிப் படிப்பு ஏறாமல் கையில் பறையை எடுப்பதற்கு வேலு ஆசானின் தந்தை முக்கிய காரணம். ஏனென்றால் வேலு ஆசானினின் தந்தை ராமையாவும் பறை இசைக் கலைஞர் தான்.

டூரிங் டாக்கீஸில் சினிமா படங்களுக்கான அறிவிப்பை பறையிசை மூலமாக அறிவித்து வந்தவர் ராமையா. அப்போது தந்தையிடம் இருந்து வேலு ஆசான் பறையிசை பயணத்தை தொடங்கி இருக்கிறார். இந்த பத்மஸ்ரீ விருது அறிவிப்பு வந்த பின் வேலு ஆசான் பேசும் போது, கலை இருந்தால் கடவுள் நம்முடன் இருப்பதற்கு சமம் என்று கூறினார். அப்படியான கடவுள் தான் வேலு ஆசானின் குருவிடம் முதல் பாராட்டு பெற காரணமாக அமைந்துள்ளார்.
திருவிழாவின் போது பறையிசை மூலமாக சாமிகளை உருவேற்றி கொண்டிருந்த போது, திடீரென அருகில் சிறுபிள்ளையாக இருந்த வேலு ஆசானும் உருவேறி இருக்கிறார். இதனை பார்த்த சேவுகன் வாத்தியார், வேலு ஆசானிடம் பறையை கொடுக்க, அந்த இடத்திலேயே உருவேறி அதகளப்படுத்தியுள்ளார். அதன்பின் பறையிசையை விரைவாக கற்றுக் கொண்டு ஊர் திருவிழாக்கள், சாவு வீடு, அறிவிப்புகள் என்று மட்டுமே வேலு ஆசானின் பயணம் இருந்துள்ளது.
இந்த நிலையில் முதல்முறையாக வேலு ஆசானுக்கு மேடையேறும் வாய்ப்பு மதுரை அரசரடி தலித் ஆதார மையம், தமிழ்நாடு இளைஞர்கள் குழுவில் தான் ஏறி இருக்கிறார். அதன்பின் ஏராளமானோருக்கு பயிற்சி வகுப்புகளை வேலு ஆசான் எடுக்க துவங்க, 2007ஆம் ஆண்டு சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அங்கு சிறந்த கலைஞர்களை தேர்வு செய்து சீனா சென்றிருக்கிறார். அதன்பின் வேலு ஆசான் போகாத நாடுகளே இல்லை என்ற நிலை தான் உள்ளது.
அமெரிக்காவுக்கு கூட 3 முறை சென்று பறை இசை பயிற்சியை அளித்திருக்கிறார். இந்த பறை இசை குறித்து வேலு ஆசான் பேசும் போது, சாதாரணமாக இழிவாக கருதப்பட்ட இசைக் கருவியை, இன்று கொண்டாடுகிறார்கள். மனிதனின் சடங்குகள், பண்பாடுகளில் பறை இருக்கிறது. பிறப்பு முதல் இறப்பு வரை இடம்பெறும் இசைக்கருவி பறை தான். பறை மூலமாக மட்டும் ஆடிக் கொண்டே இசைக்க முடியும். செய்திப் பறை, சந்தோஷப் பறை, கொண்டாட்டப் பறை, வீரப் பறை, மஞ்சுவிரட்டு பறை, சிலம்பப் பறை, புலிப் பறை, சாமி வேட்டைப் பறை என்று ஏராளமான வகைகள் இருக்கிறது.
பறை தான் என் உயிர் மூச்சு. என் வாழ்க்கையே அதுதான். இந்த விருது அறிவித்த அனைவருக்கும் நன்றி. தமிழர்களுக்கும், குரு சேவுகன் ஐயாவுக்கும் நன்றி கூறி கொள்கிறேன் என்று தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல், வரும் காலங்களில் பறை இசைக் கலைஞர்கள் நன்றாக படிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாடு அரசு தரப்பில் மரபுக் கலைகளை ஒரு பாடமாக வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications