பிரியாணிக் கடைக்காரருடன் பாக்சிங் ஆடிய ரவுடி யுவராஜ்.. இந்து மகா சபாவில் இருந்தவராமே!
சென்னை: சென்னையில் பிரியாணிக் கடைக்காரர்களை பாக்சிங் போட்டு கும்மாங்குத்து விட்டு தலைமறைவாகியுள்ள யுவராஜ் முன்பு சங் பரிவார் அமைப்புகளில் வலம் வந்தவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவருடையே வேலையே காசு கொடுக்கும் இடத்துக்குப் போய் அடிதடி, கலாட்டா போன்றவற்றை செய்வதுதான் என்றும் ஊகிக்க முடிகிறது. இவரைப் பார்த்தால் அரசியல்வாதி போலவே இல்லை.
அரசியல்வாதி என்ற போர்வையில் வலம் வரும் கூலிப்படைக்காரர்களைப் போலத்தான் யுவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகளைப் பார்க்க முடிகிறது. அந்த மாதிரிதான் இவரது செயல்பாடுகளை ஊகிக்க முடிகிறது.

ஆர்எஸ்எஸ் தொண்டரா
யுவராஜின் பின்னணி தொடர்பாக சில தகவல்கள் தெரிய வந்துள்ளன. இவரது பெயரில் ஒரு பேஸ்புக் பக்கம் உள்ளது. அதில் இவரது புரபைல் பகுதியில் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்து செயல்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் புரபைல் படத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் இருப்பது போல போட்டுள்ளார்.

டைசன் பிடிக்குமாம்
இவரது விளையாட்டு விருப்பப் பட்டியலில் பிடித்த விளையாட்டு வீரர்களாக பாக்ஸிங் மைக் டைசனை மட்டும் லைக் செய்துள்ளார். எனவே இவர் ஒரு பாக்ஸிங் வெறியர் என்பதை முகநூலிலும் வெளிப்படுத்தியுள்ளார் (முழு பாக்ஸராக மாற எத்தனை பிரியாணிக் கடைக பர்னிச்சர்களைப் போட்டு உடைத்தாரோ).

இந்து மகாசபா செயலாளர்
அதேபோல அகில இந்திய இந்து மகா சபாவின் மாநிலச் செயலாளராகவும் இவர் இருந்துள்ளார். இதுதொடர்பான ஒரு புகைப்படமும் வெளியாகியுள்ளது. அதில் அகில இந்திய இந்து மகாசபாவின் கோடம்பாக்கம் ஸ்ரீஜியின் 42வது பிறந்த நாளையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

காவி அரசியல்வாதி
அதேபோல இதே இந்து மகசாபாவின் விழா ஒன்றில் மேடையில் இவருக்கு காவி பொன்னாடை போர்த்தி கெளரவம் செய்வது போல காட்சி உள்ளது. மொத்தத்தில் இவர் ஒரு காவி புரட்சியாளராகவும் சில காலம் வலம் வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

பாரம்பரியம்
இதை வைத்து தற்போது இணையதளத்தில் டிரோல் செய்து வருகிறார்கள். அதாவது கோவையில் பாஜகவினர் நடத்திய ஒரு வன்முறை வெறியாட்டத்தின்போது பிரியாணி அண்டாவைத் தூக்கிச் சென்றனர் பாஜகவைச் சேர்ந்த சிலர். அந்த வரிசையில் இப்போது பிரியாணிக் கடையில் தாக்குதல் நடத்திய யுவராஜுக்கும் சங் பரிவார் பின்னணி இருப்பதால் இந்த "பிரியாணி பாரம்பரியம்" தொட்டுத் தொடர்கிறது என்று கிண்டலடித்து வருகின்றனர்.
சரியாப் போச்சு!
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications