இதுக்காகத்தான் 2வது முறையாக கூவத்தூர் போனாராம் சசிகலா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவைச் சேர்ந்த 129 எம்எல்ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள கூவத்தூர் சொகுசு ரிசார்ட்டுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா அடுத்தடுத்த நாட்களில் சென்று பார்த்து பேசி அவர்களை ஆறுதல் படுத்தி வருகிறார்.

ஒவ்வொருவராக ஓபிஎஸ் பக்கம் செல்லச் செல்ல எம்எல்ஏக்களும் சென்றுவிடுவார்களோ என்ற அச்சத்தில், சசிகலா முதல் முறையாக சொகுசு ரிசார்ட்டுக்கு சென்று எம்எல்ஏக்களை சந்தித்து யாரும் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக சென்றுவிடாதுக் கூடாது என்று கூறி அதற்கான சத்தியத்தை பெற்றார். அப்போது ரிசார்ட்டில் ஹோமம் வளர்த்ததாகவும், அந்த தீயின் முன்பு ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தரமாட்டோம் என்று சத்தியம் வாங்கியதாகக் கூறப்படுகிறது.

Why Sasikala went to Koovathur for 2nd time

அப்போது மாற்றுமதத்தைச் சேர்ந்த எம்எல்ஏக்களும் சசிகலா கேட்கிறார் என்பதற்காக தீ முன் சத்தியம் செய்துவிட்டார்கள். ஆனால், அவர்கள் அனைவரும் பெரும் மன உலைச்சலில் இருந்ததோடு தங்களது அதிருப்தியை சசிகலாவிற்கு சென்று சேரும் வகையில் பேசி இருக்கிறார்கள். இதனால் பயந்து போன சசிகலா அவர்களை சமாதானப்படுத்தவே நேற்று சசிகலா கூவத்தூர் சென்று எம்எல்ஏக்களை சந்தித்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

6வது நாளாக இன்றும் எம்எல்ஏக்கள் கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள். அந்த பகுதியில் வாழும் மக்கள் தொடர்ந்து அவதிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இதற்கான தீர்வை விரைவில் எடுக்க வேண்டும் என்று கூவத்தூர் மக்கள் கோரி வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
This is the reason that Sasikala went to Koovathur for 2nd time to meet MLAs in resort.
Please Wait while comments are loading...