For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக கவர்னராகப் போகிறாரா "பொர்க்கி" சு. சாமி? அதான் சசி முதல்வராவதை ஆதரிக்கிறாரா?

"பொறுக்கி" புகழ் சுப்பிரமணியசாமி தமிழக ஆளுநராக நியமிக்கப்படவுள்ளாராம். இதனால்தான் அவர் சசிகலாவை ஆதரித்து டிவீட் போடுவதாக கூறப்படுகிறது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழர்களை பொறுக்கிகள் என்று வசைபாடி வரும் சுப்ரமணியசாமி விரைவில் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால்தான் சசிகலா முதல்வராகவேண்டும் என்று டுவிட் போட்டு வருகிறார் என்கிறார்கள்.

ஜெயலலிதாவிற்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு தயாராக உள்ளது எப்போது வேண்டுமானாலும் தீர்ப்பு வெளியாகலாம். இதன் காரணகர்த்தாவான சுப்ரமணியசாமி, தமிழக முதல்வராக சசிகலா வரவேண்டும் என்று பதிவிட்டு வருகிறார். சசிகலா முதல்வரானால், அதன்பின் தமிழக ஆளுநராக சுப்ரமணிய சாமிதான் நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

Why Subramanian Swamy is backing Sasikala?

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சசிகலா தமிழக முதல்வராக வேண்டும் என்று தொடர்ச்சியாக கருத்து கூறி வருகிறார் சுப்ரமணியசாமி. இதற்கான காரணம் என்ன என்பதுதான் திருவாளர் பொது ஜனங்களுக்கு விளங்கவில்லை.

ஓபிஎஸ் ராஜினாமா

பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஓ.பன்னீர் செல்வம் ராஜினாமா செய்தது, சட்டசபைக்குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது என அரசியல் களத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. இதனையடுத்து 2 நாட்கள் எங்கும் செல்லாமல் தனது வீட்டிலேயே இருந்தார் ஓ.பன்னீர் செல்வம்.

அமைதிப்புரட்சி

அமைதியாக தமிழகம் நகர்ந்தாலும் போயஸ்கார்டனில் ஆட்சியமைப்பது பற்றிய ஆலோசனைகள் நடந்தன. பதவியேற்பு விழா ஏற்பாடுகளும் நடந்தன. ஆளுநர் எப்போது வந்தாலும் பதவியேற்பு என்று கூறப்பட்ட நிலையில் 7ஆம் தேதி இரவு 7 மணிக்கு ஓபிஎஸ்க்கு எங்கிருந்த வந்த போன் அவரை உசுப்பி விட்டதாம். உடனே தலைமைச் செயலகம் போகச் சொன்ன பன்னீர் செல்வம், எம்ஜிஆர் நினைவிடம் வந்த உடன் நேராக உள்ளே போய் ஜெயலலிதா நினைவிடம் முன்பு அமர்ந்து 40 நிமிடம் தியானம் செய்தார்.

அரசியல் பரபரப்பு

அதன் பின்னர் அவர் பேசியதுதான் தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது ராஜினாமா கட்டாயப்படுத்தி பெறப்பட்டது என்று கூறிய உடனே பரபரப்பு பற்றிக்கொண்டது. செவ்வாய்கிழமை இரவு முதலே பலரது தூக்கம் பறிபோனது.

சசிகலா ஆவேசம்

சத்தம் இல்லாமல் முதல்வர் நாற்காலியில் அமர நினைத்த சசிகலாவிற்கு தற்போது மண்டைக்குடைச்சல் அதிகமாகிவிட்டது. உடனே அவரை பொருளாளர் பதவியில் இருந்து இரவோடு இரவாக நீக்கினார். ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிராகவும் கருத்து கூறினார். அதே நேரத்தில் என்னை நீக்க சசிகலாவிற்கு அதிகாரம் இல்லை என்று கூறினார் ஒ.பன்னீர்செல்வம்

சுப்ரமணியசாமி

தமிழகத்தில் நடக்கும் கலாட்டாக்களை மத்திய அரசு கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார். அதற்கேற்றார் போல ஆளுநரும் மெதுவாக இரண்டு நாட்கள் கழித்துதான் சென்னைக்கு வந்து சேர்ந்தார். இதற்கு ஆளுநரை குறை சொன்னார் சுப்ரமணியசாமி.

சொத்துக்குவிப்பு வழக்கு

சொத்து குவிப்பு வழக்கில் அனைத்து வாதங்களும் முடிந்த நிலையில், தீர்ப்பு எப்போது வெளியாகும் என்ற பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அடுத்த ஒரு வாரத்திற்குள்

இதன் தீர்ப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காகவே ஆளுநர் பொறுமை காத்து வருகிறார்.

சசி ஆதரவு டுவிட்

பாஜக எந்த நிலைப்பாட்டில் இருக்கிறது என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் தமிழிசை சவுந்தராஜன் மட்டும் சசிகலா சட்டசபைக்குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட நாளில் இருந்தே அவருக்கு எதிராக கருத்து கூறி வருகிறார். இந்த சூழ்நிலையில் சுப்ரமணியசாமி, தனது டுவிட்டர் பக்கத்தில் சசிகலாவிற்கு ஆதரவாகவே பதிவிட்டு வருகிறார்.

தமிழக ஆளுநர் ஆகிறார் சாமி

சுப்ரமணியசாமிக்கும் சசிகலாவிற்கும் இடையே போடப்பட்ட ஒரு மெமரேண்டம் ஆப் அண்டர்ஸ்டேன்டிங்தான் இதற்கு காரணம் என்கின்றனர். சசிகலா முதல்வராக பதவியேற்ற பின்னர் சில மாதங்களில் ஆளுநராக தமிழகம் வருவாராம் சுப்ரமணியசாமி.

English summary
Sources say Subramaniam Swamy may be appointed as the governor of Tamil Nadu soon, Thats why he is supporting Sasikala a the CM.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X