For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேனி அருகே பயங்கர காட்டுத் தீக்குள் சிக்கிய மாணவிகள்- மீட்பு பணியில் தாமதம்

தேனி அருகே காட்டுப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி மாணவி ஒருவர் பலியாகி இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    தேனி காட்டுத்தீயில் சிக்கிய மாணவிகளை மீட்கும் பனி தீவிரம்

    தேனி: தேனி அருகே குரங்கனி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கியவர்கள் சென்னை, திருப்பூர், ஈரோடு மாணவிகள் என தெரியவந்துள்ளது.

    தேனி அருகே குரங்கணி காட்டுப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு இருக்கிறது. இந்த காட்டுத்தீ கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பரவி வருகிறது.

    Wild fire strikes in Theni kills 1 girl student

    இந்த பகுதியில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட கோவை, ஈரோடு மாணவிகள் வந்துள்ளனர். மொத்தம் 40 மாணவ, மாணவிகள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த காட்டுத்தீயில் சிக்கி மாணவி ஒருவர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இது உறுதிப்படுத்தப்படுத்தப்படவில்லை. ஏற்கனவே இதில் 3 குழந்தைகள் உட்பட 15 பேர் மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

    Wild fire strikes in Theni kills 1 girl student

    இந்த தீவிபத்தில் சிக்கியவர்கள் சென்னை மாணவிகள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஐடி ஊழியர்கள் சிலரும் இந்த தீ விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.

    காட்டுத் தீயில் சிக்கிய 21 மீட்க முயற்சி நடைபெற்று வருகிறது. தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இரவு ஆகிவிட்டதால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. காலையில் சூரிய உதயத்திற்கு பிறகே மீட்பு பணி நடைபெறும் என்று தெரிகிறது.

    மேலும் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மாணவிகளும் இத்தீவிபத்தில் சிக்கியுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.

    English summary
    Wild fire strikes in Theni kills 1 girl student. 25 more college girl strucked inside the fire area.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X