ஆள் ஆளுக்கு ஒரு கருத்து.. அதிமுக இப்போதைக்கு இணைவதாக தெரியவில்லை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவின் இரு அணிகளையும் இணைப்பது பற்றி முறையான பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்று ஓபிஎஸ் கூறியுள்ளார். அதிமுக அம்மா அணியிடமிருந்து முறையான அழைப்பு எதுவும் வரவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு பிளவு பட்ட அதிமுகவை இணைக்க ஆகஸ்ட் 5வரை கெடு விதித்துள்ளார் டிடிவி தினகரன். அணிகள் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்துக்கொண்டிருக்கிறது.

தமிழக அமைச்சர்கள் அனைவரும் அணிகள் இணையும், அதிமுக ஆட்சி 4 ஆண்டுகள் நீடிக்கும் என்று கூறி வருகின்றனர். ஆள் ஆளுக்கு ஒரு கருத்து சொல்வதால் அதிமுக இணையுமா? இரட்டை இலை கிடைக்குமா என்று தொண்டர்கள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

2 நிபந்தனைகள்

2 நிபந்தனைகள்

அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தாங்கள் விதித்த 2 நிபந்தனைகளை நிறை வேற்றினால்தான் பேச்சு வார்த்தை என்று உறுதியாக கூறிவிட்டனர். மாஃபா பாண்டியராஜன், இந்த நிபந்தனைகள் பற்றிய தெளிவுபடுத்தி விட்டார்.

ஓபிஎஸ் கருத்து

ஓபிஎஸ் கருத்து

இரு அணியினரும் மாறுபட்ட கருத்துக்களை கூறி வருவதால் பேச்சுவார்த் தைக்கு இணக்கமான சூழல் உருவாகவில்லை. இதனிடையே இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அணிகள் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தை முறையாக நடைபெறவில்லை என்றார்.

எதுவும் வரவில்லை

எதுவும் வரவில்லை

அணிகள் இணைக்க முறையான அழைப்பு எதுவும் வரவில்லை என்றும் கூறிய ஓ.பன்னீர் செல்வம், எங்களின் நிபந்தனையை கூறிவிட்டோம். எங்களின் நிலைப்பாட்டையும் தெரிவித்து விட்டோம் என்றும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

அதே நேரத்தில் டிடிவி தினகரனோ, கடந்த 3 மாதமாக கட்சி சரியாக செயல்படவில்லை என்றும், கட்சியை வலுப்படுத்த தான் கட்சி அலுவலகம் வருவேன் என்றும் கூறியுள்ளார் டிடிவி தினகரன்.

OPS Says We are ready to speak for another ADMK team ஓபிஎஸ் எடப்பாடி பேச்சுவார்த்தை?
கெடு முடிகிறது

கெடு முடிகிறது

இப்படி ஆள் ஆளுக்கு ஒரு கருத்தை கூறி வருவதால் அதிமுக அணிகள் இணைவதில் குழப்பம் நீடிக்கிறது. இதனிடையே அணிகள் இணைய டிடிவி தினகரன் கொடுத்த கெடு நாளை ஆகஸ்ட் 4ஆம் தேதியுடன் முடிவடைவதால் அதிமுகவில் அடுத்த கட்ட நகர்வுகள் தொடங்கியுள்ளன.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
ADMK factions are talking different day by day, so the cadres have no clue about the unification.
Please Wait while comments are loading...