திமுகவுக்காக திருவண்ணாமலையை வெல்வாரா இந்த ”அண்ணா”

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: லோக்சபா தேர்தலில் திமுக சார்பில் திருவண்ணாமலை தொகுதி வேட்பாளராக சி.என்.அண்ணாதுரை அறிவிக்கப்பட்டுள்ளார். அண்ணாவின் பெயர் மற்றும் இனிஷியலுடன் கூடிய வராக இருப்பதால் இப்போதே தொகுதியில் "டாக் ஆப் தி" நபராக மாறி விட்டார்.

திருவண்ணாமலை வேட்பாளார் சி.என்.அண்ணாதுரை 41 வயதானவர். முதலியார் சமூகத்தை சார்ந்தவர். வயது 41 ஆனாலும் கூட திருவண்ணாமலை மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக உள்ளார்.

Will this Annadurai win the Thiruvannamalai for DMK?

பி.காம் வரை படித்துள்ள இவர் "ரெடிமிக்ஸ் கான்கீரிட்" தயாரிப்பு நிறுவனத்தை திருவண்ணாமலையில் நடத்தி வருகிறார்.

முன்னாள் திமுக உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் தீவிர ஆதரவாளர். அதிமுகவில் முதலியார் பிரிவைச்சேர்ந்த வேட்பாளர் அறிவிக்கப்பட்டதால் ,திமுகவும் முதலியார் வேட்பாளரான சி.என்.அண்ணாதுரையை அறிவித்துள்ளது.

இவருக்கு எதிராக அதிமுக சார்பில் பெண் வேட்பாளர் வனரோஜா போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+