கனமழை: நாகர்கோவிலில் சுவர் இடிந்து விழுந்து பெண் பலி

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சென்னையை எச்சரிக்கும் நார்வே வானிலை மையம்- வீடியோ

  கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே மரவன்குடியிருப்பு பகுதியில் மழையின் காரணமாக சுற்று சுவர் இடிந்து விழுந்ததில் ஜான்சி மேரி, 43, என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நேசமணி நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

  வடகிழக்கு பருவமழை கடலோர மாவட்டங்களில் தீவிரமடைந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை முதல் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் நகர பகுதிகள் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது.

  Woman killed in wall collapse in Kanniyakumari

  பூதப்பாண்டி, திட்டுவிளை, சுசிந்திரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

  மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்து வரும் நிலையில், நகர் பகுதி முழுவதும் இதமான சூழ்நிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இதன் மூலம் நகரின் முக்கிய நீர்ஆதார பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

  நாகர்கோவில் அருகே மரவன்குடியிருப்பு பகுதியில் மழையின் காரணமாக சுற்று சுவர் இடிந்து விழுந்ததில் ஜான்சி மேரி, 43, என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நேசமணி நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  The monsoon rains claimed the life of a woman,43 who was killed when the mud wall of an age-old house at maravankudiyiruppu near Nagarkoil.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற