For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போன் பாஸ்வேர்டை சிபிஐ கேட்கிறது.. என்ன ஆனாலும் கொடுக்க மாட்டேன்.. கார்த்தி சிதம்பரம் விடாப்பிடி

கார்த்தி சிதம்பரத்தின் போன் பாஸ்வேர்டை வாங்குவதற்கு கடந்த 2 நாட்களாக சிபிஐ முயன்று வருகிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    கார்த்தி சிதம்பரத்தின் தந்திரங்களை பார்த்து விழி பிதுங்கும் சிபிஐ!- வீடியோ

    சென்னை: கார்த்தி சிதம்பரத்தின் போன் பாஸ்வேர்டை வாங்குவதற்கு கடந்த 2 நாட்களாக சிபிஐ முயன்று வருகிறது. ஆனால் கார்த்தி என்ன நடந்தாலும் போன் பாஸ்வேர்ட் கொடுக்க மாட்டேன் என்றுள்ளார்.

    மும்பையை சேர்ந்த ஐஎன்எக்ஸ் மீடியா கருப்பு பண முறைகேடு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. இதில் 307 கோடி வரை முறைகேடு நடைபெற்று இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டு இருக்கிறது.

    இது தொடர்பான வழக்கில் நேரில் ஆஜராகும் படி சிபிஐ கார்த்தி சிதம்பரத்தை சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்து இருக்கிறது. தற்போது இவர் சிபிஐ கஸ்டடியில் இருக்கிறார்.

    சாப்பாடு பிரச்சனை

    சாப்பாடு பிரச்சனை

    அவர் சாப்பாடுதான் பெரிய பிரச்சனையாக இருக்கிறது என்று குறிப்பிட்டு இருக்கிறார். வெறும் தயிர் சாதமும், பழங்களும் மட்டுமே கிடைப்பதாக அவர் கூறியுள்ளார். வீட்டு சாப்பாடு வேண்டாம் என்று ஏற்கனவே நீதிமன்றம் மறுத்துவிட்டது குறிப்பிடதக்கது.

    போன்

    போன்

    இந்த நிலையில் சிபிஐ கார்த்தியுடன் அவரது போனை கேட்டு இருக்கிறது. அதில் முக்கியமான தகவல்கள் இருக்கலாம் என்று சிபிஐ கூறியுள்ளது. மோசடியில் தொடர்பு உள்ளவர்களுடன் அவர் பேசிய குறிப்புகள் இருக்கலாம் என்று சிபிஐ தரப்பு கூறியுள்ளது.

    மாட்டேன்

    மாட்டேன்

    இதற்கு கார்த்தி ''என்னுடைய போன் பாஸ்வேர்டை கொடுக்க முடியாது. அதில் என்னுடைய பர்சனல் புகைப்படங்கள் இருக்கிறது. மேலும் இவர் மோசடி நடந்ததாக சொல்வது 2008, நான் போனை வாங்கியது 2016ல். எனவே அதில் எந்த தகவலும் இருக்காது'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

    மேலும் நாட்கள் வேண்டும்

    மேலும் நாட்கள் வேண்டும்

    இந்த நிலையில் சிபிஐ இவரை விசாரிக்க மேலும் கால அவகாசம் கேட்டு இருக்கிறது. கார்த்தியிடம் இருந்து தகவல்களை வாங்க முடியவில்லை என்றுள்ளனர். நிறைய விஷயங்களை விசாரிக்க வேண்டி இருக்கிறது என்று சிபிஐ இன்று நீதிமன்றம் வாதாடி இருக்கிறது. இப்போது 3 நாட்கள் கஸ்டடி நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

    English summary
    IT officials raid in Karthi Chidambaram premises. Karthi Chidambaram arrested in Chennai airport in INX media by CBI. P Chindambaram refuses to answer on Karthi arrest.CBI plans to interrogate Karthi Chindambaram and Indrani Mukerjea together
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X