For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோவையில் உலக சுற்றுசூழல் தினம்: ஒரே நேரத்தில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு பள்ளி மாணவர்கள் அசத்தல்

சுற்றுசூழல் விழிப்புணர்வு ஏற்படுத்த மாணவர்கள் பத்தாயிரம் மரங்கள் நடவு செய்தனர்.

By T Nandhakumar
Google Oneindia Tamil News

கோவை: உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு கோவையில் உள்ள லெட்ஸ் தேங்க் பவுண்டேஷன் மற்றும் பள்ளி கல்வித் துறை சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பத்தாயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

உலக சுற்றுச் சூழல் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு கோவையில் உள்ள லெட்ஸ் தேங்க் பவுண்டேஷன் மற்றும் பள்ளிக் கல்வித் துறை சார்பில் கோவை மாவட்டத்தை சுற்றி உள்ள 297 அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பத்தாயிரம் மரக்கன்றுகள் ஒரே நேரத்தில் நடவு செய்யப்பட்டது.

world environment day celebrates in coimbatore

இதற்கான பணி இரண்டு மாதங்களாக நடைபெற்று வருகிறது. அனைத்து பள்ளிகளிலும் மரக்கன்றுகளுடன், இயற்கை உரங்கள், பெயர் பலகைகள் வழங்கப்பட்டது.

மாணவர்களுக்கு மரங்கள் பற்றிய விழிப்புணர்வும் சுற்று சூழல் பற்றிய விழிப்புணர்வும் ஏற்படுத்தவே பள்ளிகளில் மரங்களை நட்டு வைத்து உள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். அனைத்து மாணவர்களும் மரங்களை சரிவர பராமரிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஒருங்கிணைப்பாளர்கள் மாணவர்களிடம் கேட்டுக் கொண்டனர்.

English summary
The World Environment Day was celebrated in Coimbatore. The school students planted 10 thousand trees simultaneously.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X