For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கணவரை இழந்து 2 நாட்களில் 19 வயது பெண் பலாத்காரம்! கோவையில் கொடூரம்!!

By Veera Kumar
Google Oneindia Tamil News

கோவை: கணவரை இழந்து 2 நாட்களே ஆன நிலையில், 19 வயது பெண் பலாத்காரத்துக்குட்படுத்தப்பட்ட சம்பவம் கோவையில் நடந்துள்ளது.

கோவை, பிரஸ் காலனி அருகே, உள்ள டயர் தொழிற்சாலையில் வேலை பார்த்த ஒடிசா மாநில தொழிலாளி, சந்திரன் இரு மாதங்களுக்கு முன், கொதிகலன் விபத்தில் பலியானார். அவர் இறப்புக்கு பின், 9 மாத கைக்குழந்தையுடன் அவரின் மனைவி பிருபா பர்ஜி (19), அதே குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார்.

Young woman raped two days after husband’s death

சந்திரன் உயிரிழந்த 2 நாட்கள் கழித்து, அதாவது, ஏப்ரல் 30ம் தேதி, பிருபா வீட்டுக்குள் நுழைந்த, அதே நிறுவன செக்யூரிட்டி கார்ட், செந்தில் என்பவர், பிருபாவை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தற்போதுதான், வெளியே தெரியவந்துள்ளது. சமூக நல அமைப்புகள் உதவியுடன், பிருபா பர்ஜி, இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும், தொழிற்சாலை அளித்த 1 லட்சம் ரூபாய் நிவாரணம், சட்டவிதிமுறைகளை விட குறைவானது என்பதால், கூடுதல் நிதி பெற்றுத்தர சிஐடியூ அமைப்பு முயன்றுவருகிறது.

இதனிடையே, பெரியநாயக்கன்பாளையம் போலீசில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் அதிருப்தி அடைந்த, ஒடிசா மாநில தொழிலாளர்கள், கோவை கலெக்டர் அலுவலகம் வந்தனர். கலெக்டரிடம் மனு கொடுத்த அவர்கள், கண்களில் கறுப்புத்துணி கட்டி தர்ணாவில் ஈடுபட்டனர்.

கணவனை இழந்து 2 நாட்களே ஆகியிருந்த நிலையில், குழந்தையுடன் தனியாக கஷ்டப்பட்ட என்னை, வீடு புகுந்து செந்தில் பலாத்காரம் செய்தார். அன்று இரவு 2 முறை என்னை பலாத்காரம் செய்த செந்தில், எதுவும் நடக்காதது போல மீண்டும் செக்யூரிட்டியாக வேலை பார்க்கிறார். ஆனால், ஒடிசா தொழிலாளி என்பதால் உள்ளூர் போலீசில் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள் என்று வேதனையுடன் கூறினார்.

English summary
A 19-year-old woman sought action against a security guard for allegedly sexually assaulting her. The security guard works for a tyre company located in Press Colony in Coimbatore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X