தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பால் விலை லிட்டர் 100 ரூபாய்.. தண்ணீர் குடம் 10 ரூபாய்.. பட்டுக்கோட்டையில் அக்கிரமம்!

புயல் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    பாதிக்கப்பட்ட பகுதிகளில் அத்யாவசிய பொருள்களின் விலை உயர்வு- வீடியோ

    பட்டுக்கோட்டை: கஜா புயல் எதிரொலியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பால் உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது.

    புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் தினமும் அத்தியாவசிய பொருட்களுக்கு திண்டாடி வருகிறார்கள். ஏற்கனவே வீடு, வாசல் இழந்து பெரும்பாலானோர் முகாம்களில் தங்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு தண்ணி, சாப்பாடு கிடைக்கவில்லை என்று புலம்பி வருகிறார்கள்.

    இதில் நிறைய மாவட்டங்களை சேர்ந்த மக்கள் நடுரோட்டில் ஒடிந்து விழுந்து கிடக்கும் மரங்களையெல்லாம் இழுத்து வந்து போட்டு மறியல் நடத்தி வருகிறார்கள். ஒரு அதிகாரியும் இன்னும் வந்து எங்களை பாக்கலைன்னா என்ன அர்த்தம் என்று ஆத்திரத்துடன் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

    ["வேதாரண்யம் தவிர வேறு எங்கும் பாதிப்புகள் இல்லை" என கூறிய அமைச்சரை முற்றுகையிட்டு காரை உடைத்த மக்கள் ]

    ஒரு லிட்டர் ரூ.100

    ஒரு லிட்டர் ரூ.100

    இருக்கிற வயித்தெரிச்சலில் அத்தியாவசிய பொருட்களின் விலையும் ஏறிவிட்டது. பட்டுக்கோட்டையில அணைக்காடு என்ற கிராமத்தில் ஒரு லிட்டர் பால் 100 ரூபாயாம். எத்தனை பேரால் இப்படி விலை கொடுத்து வாங்க முடியும்?

    பால் தட்டுப்பாடு ஏன்?

    பால் தட்டுப்பாடு ஏன்?

    புயல் வந்த மறுநாள் ராஜேந்திரபாலாஜி ஒரு கூட்டத்தில் பேசும்போது, கஜா கூஜாவாகி விட்டது என்றார். கூடவே அனைத்து புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கும் ஆவின் பால் தட்டுப்பாடின்றி கிடைக்க எல்லா நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அதே மேடையில்தான் பேசினார். ஆனால் தற்போது ஒரு லிட்டர் பாலின் விலையை கேட்டால் நிலைமை வேறாக இருக்கிறது.

    விலை உயர்வு

    விலை உயர்வு

    அடித்த புயலில், பயிர்கள், மரங்கள் என விளைநிலங்கள் எல்லாமே நீரில் மூழ்கி விட்டதால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வழக்கமாக சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களின் விலை தற்போது, ரூ.20 முதல் ரூ.50 வரை உயர்ந்திருப்பதாக பொதுமக்கள் புகார் சொல்லுகிறார்கள்.

    மருத்துவ முகாம்

    மருத்துவ முகாம்

    கரண்ட் கம்பங்கள் எல்லாம் முறிந்து கீழே விழுந்து கிடக்க, அதை இன்னும் தூக்கி நிறுத்தி சரி பண்ண மாதிரியும் காணோம். இதனால் ராத்திரிகளில் கரண்ட் இல்லாமல், கொசுக்கடிகளில் பிள்ளைகளை வைத்து கொண்டு ஏராளமானோர் மாவட்டங்களில் அவதிப்பட்டு வருகிறார்கள். இதில் குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்துகொண்டிருக்கிறது. பட்டுக்கோட்டையில் உடனே தங்களுக்கு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என்று கோரிக்கையாக கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

    1 மணி நேரம் ரூ.1000

    1 மணி நேரம் ரூ.1000

    பெரும்பாலான மக்கள் இருளில் தவித்து வருகிறார்கள். புதுக்கோட்டையில் திருக்கோகர்ணம், திலகர்திடல், காமராஜ் நகர் பகுதியில் ஜெனரேட்டர்கள் வாடகைக்கு விடுகிறார்களாம். ஒருமணி நேரத்திற்கு ஆயிரம் ரூபாயாம். இதற்கு போட்டா போட்டி வேறு. வசதி இருப்பவர்கள் ஜெனரேட்டரை வாடகைக்கு வாங்குகிறார்கள்? இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்?

    பைக்கில் குடிநீர்

    பைக்கில் குடிநீர்

    குடிக்கவும் நல்ல தண்ணீர் கிடையாது. தேங்கி கிடக்கும் மழை தண்ணீரை வைத்து கொண்டு துணி துவைப்பது, பாத்திரம் கழுவுவது என பாதிக்கப்பட்ட மக்கள் இறங்கி விட்டார்கள். சிலர் பைக்கில் குடங்களை வைத்து நீண்ட தூரம் போய் தண்ணி கொண்டு வருகிறார்கள்.

    காசுக்கு குடிநீர்

    காசுக்கு குடிநீர்

    மேலும் சிலர் குடிதண்ணீரை விலைக்கு வாங்கி கொண்டு இருக்கிறார்கள். அந்த தண்ணி விலையும் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டு போகிறது. அதையும் மீறி காசு கொடுத்து வாங்க நினைத்தால் உரிய குடிநீரும் கிடைப்பதில்லையாம். எப்போது தங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்குமோ என கலங்கியபடியே கேட்கின்றனர்.

    English summary
    Cyclone Gaja: Essential Goods Rate High in Pudukottai Districts
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X