தாயாக போகும் நாய்.. ஊரையே கூட்டி அமர்க்களப்படுத்திய ஓனர்.. வாயை பிளக்கும் தஞ்சை!
தஞ்சை: தஞ்சாவூரில் சீர்வரிசை தட்டு வைத்து வெகு விமரிசையாக நாய்க்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. நிறைமாத கர்ப்பிணி நாயான அபிராமிக்கு ஏராளமான மக்கள் மஞ்சள் மற்றும் குங்குமத்தை நெற்றியில் இட்டு ரசித்தனர்.
Recommended Video
நிறைமாத கர்ப்பிணிகளுக்கு 9வது அல்லது 7வது மாதத்தில் பிறந்த வீட்டு சீராக வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படும். அப்படி ஒரு வளைகாப்பு நாய்க்கு நடந்திருக்கிறது.
தஞ்சை தென்றல் நகர் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வீட்டில் டாபர்மேன் என்ற நாயை வளர்த்து வருகிறார் இந்த நாயின் பெயர் அபி என்கின்ற அபிராமி என்று அழைக்கப்படும். இந்த அபிராமி என்ற நாய்க்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இதை ஊர் மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.

தஞ்சை தென்றல் நகர்
தஞ்சை தென்றல் நகர் பகுதியில் வகிக்கும் கிருஷ்ணமூர்த்திக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன இந்த இரண்டு பெண் குழந்தைகளுக்கும் திருமணமாகி சிங்கப்பூர் மற்றும் சென்னையில் இருந்து வருகிறார்கள். தனியாக இருந்த கிருஷ்ணடுமூர்த்தி தம்பதி, அபிராமி என்ற பெயரில் டாபர்மேன் நாயை வளர்த்து வந்தார்.

வளைகாப்பு நடத்த முடிவு
இந்த நாயை ஒரு பெண்மணியாக வீட்டில் ஒரு குடும்பத்தில் உள்ள நபரை போல் வளர்த்து வந்திருக்கிறார். இந்த நாய் கடந்த சில மாதம் முனபு கர்ப்பம் ஆனது. இதையடுத்து அபி என்ற நாய்க்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்த கிருஷ்ணமூர்த்தி முடிவு செய்தார்.

ஆச்சர்யப்பட்ட உறவினர்கள்
இதன்படி நாய்க்கு வளைகாப்பு வைக்க போவதை அழைப்பிதழில் அச்சடித்து, ஊரில் உள்ளவர்களை குடும்பத்தோடு வருமாறு கிருஷ்ணமூர்த்தி அழைத்தார், அவரது அழைப்பை ஏற்று அவரது உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் அங்கு ஆச்சர்யத்துடன் வந்தனர்.

ஆச்சர்யத்தில் மக்கள்
சீர்வரிசை தட்டுகளை ஊர்வலமாக நடந்து வந்து தட்டுக்களை வரிசையாக பொதுமக்கள் அடுக்கி வைத்தனர். மஞ்சள் குங்குமத்தால் அபிக்கு (நாய்க்கு) திலகமிட்டு வளையல் அணிந்து ஆராத்தி எடுத்தனர். இப்படியாக இனிதாக வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது தாயாகும் அபி மொத்தம் கர்ப்பம் ஆனதில் இருந்து 63 நாட்கள் கழித்து குட்டியை ஈன்றெடுக்கும் இன்னும் 13 நாட்களில் தாயாகப்போகிறது அபி. நீங்களும் வாழ்த்துங்களேன்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications